சிக்கண்ணா கல்லூரியில் இறுதிக்கட்ட கலந்தாய்வு

Added : செப் 21, 2022 | |
Advertisement
திருப்பூர் : திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரியில் நிரப்பப்படாமல் உள்ள இளநிலை பாடப்பிரிவுகளுக்கான இறுதி கட்ட கலந்தாய்வு, 23ம் தேதி (நாளை) நடக்கிறது.நடப்பாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஐந்து கட்டமாக நடந்தது. தமிழ் இலக்கியம் - 7, ஆங்கில இலக்கியம் - 5, கணினி பயன்பாட்டியல் - 9, கணினி அறிவியல் - 10, இயற்பியல் - 4, வரலாறு - 5, கணிதம் - 26 ஆகிய எண்ணிக்கையில், பாடப்பிரிவுகளில் காலியாக

திருப்பூர் : திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரியில் நிரப்பப்படாமல் உள்ள இளநிலை பாடப்பிரிவுகளுக்கான இறுதி கட்ட கலந்தாய்வு, 23ம் தேதி (நாளை) நடக்கிறது.

நடப்பாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஐந்து கட்டமாக நடந்தது. தமிழ் இலக்கியம் - 7, ஆங்கில இலக்கியம் - 5, கணினி பயன்பாட்டியல் - 9, கணினி அறிவியல் - 10, இயற்பியல் - 4, வரலாறு - 5, கணிதம் - 26 ஆகிய எண்ணிக்கையில், பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இறுதிகட்ட கலந்தாய்வு நாளை காலை, 10:00 மணிக்கு கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.

இது குறித்து, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கூறுகையில்,''ஆன்லைனில் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை கட்டாயம் கொண்டு வர வேண்டும். தரவரிசை கடிதம், பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், டி.சி., நகல் மற்றும் அசல் சான்றிதழுடன், பெற்றோரும் வர வேண்டும். அசல் சான்றிதழ் இல்லாது பங்கேற்க இயலாது. இடம் கிடைக்காதவர்களும் பங்கேற்கலாம்,'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X