பொது மருத்துவ முகாம்

Added : செப் 21, 2022 | |
Advertisement
அவிநாசி : அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, பெரியாயிபாளையளத்தில் சிவசர்மிளா அறக்கட்டளை சார்பில், மருத்துவ முகாமில், 318 பேருக்கு பரிசோதனை நடைபெற்றது.சிவசர்மிளா அறக்கட்டளை, அண்ணா கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மற்றும் விடியல் அறக்கட்டளை சார்பில், நடந்த இந்த முகாமுக்கு, ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் நடராஜன் முன்னிலை வைத்தார்.

அவிநாசி : அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, பெரியாயிபாளையளத்தில் சிவசர்மிளா அறக்கட்டளை சார்பில், மருத்துவ முகாமில், 318 பேருக்கு பரிசோதனை நடைபெற்றது.

சிவசர்மிளா அறக்கட்டளை, அண்ணா கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மற்றும் விடியல் அறக்கட்டளை சார்பில், நடந்த இந்த முகாமுக்கு, ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் நடராஜன் முன்னிலை வைத்தார். அறக்கட்டளை தலைவர் கண்ணன் வரவேற்றார்.அண்ணா கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், விடியல் அறக்கட்டளை நிர்வாகி திருநாவுக்கரசு முகாமை துவக்கி வைத்தனர். ரேவதி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் பங்கேற்ற பொது மருத்துவ முகாமில் 150 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.திருப்பூர் லோட்டஸ் கண் மருத்துவமனையினரின் கண் மருத்துவ முகாமில் 162 பேருக்கு பார்வை குறித்த பரிசோதனையும் செய்யப்பட்டது. அறக்கட்டளை துணைத்தலைவர் சிலம்பரசன் நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X