மகிழ்ச்சி தந்த மாற்றம்! மீண்டும் உருவான தொடக்க கல்வி அலுவலகம் நிர்வாக சீர்திருத்தத்தால், ஆசிரியர்களுக்கு நிம்மதி

Added : செப் 21, 2022 | |
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தாராபுரம், பல்லடம் மாவட்ட கல்வி அலுவலகங்கள் தொடக்க கல்வி அலுவலகங்களாக மாற்றப்பட்டுள்ளன.தமிழக பள்ளி கல்வித்துறையின் நிர்வாக அமைப்பில், தொடக்க, நடுநிலை பள்ளிக்கு, தனி மாவட்ட அலுவலர்களும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.கடந்த, 2018ம் ஆண்டு நிர்வாக

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தாராபுரம், பல்லடம் மாவட்ட கல்வி அலுவலகங்கள் தொடக்க கல்வி அலுவலகங்களாக மாற்றப்பட்டுள்ளன.

தமிழக பள்ளி கல்வித்துறையின் நிர்வாக அமைப்பில், தொடக்க, நடுநிலை பள்ளிக்கு, தனி மாவட்ட அலுவலர்களும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.கடந்த, 2018ம் ஆண்டு நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த நடைமுறை மாற்றப்பட்டது. இதன்கீழ், மாவட்ட கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் கொண்டு வரப்பட்டன.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கான அதிகாரம் முழுவதும், மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்கப்பட்டன. உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டனர்.இந்த அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு உரிய ஆவணங்களை சமர்பித்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். அனைத்து பள்ளிகள் கண்காணிப்பு செய்தல், அலுவல் பணிகளை மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள குறைந்தப்பட்ச பணியாளர்களை கொண்டே மேற்கொள்ளப்பட்டது.

இதனால், வேலைப்பளு அதிகரித்ததுடன், பணிகளை விரைந்து முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. கல்வி அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிக்க பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசிடம் வலியுறுத்தி வந்தனர். அதற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.அவ்வகையில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பணியிடம் உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர் பணியிடம் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆய்வாளர் பணியிடங்கள் உருவாக்கி செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.திருப்பூர் வருவாய் கல்வி மாவட்டத்திற்குட்பட்டு திருப்பூர், பல்லடம், தாராபுரம் மற்றும் உடுமலை மாவட்ட கல்வி அலுவலங்கள் செயல்பட்டு வந்தன. இதில், தாராபுரம் மற்றும் பல்லடம் மாவட்ட கல்வி அலுவலகங்கள் தொடக்க கல்வி அலுவலகமாகவும், உடுமலை மாவட்ட கல்வி அலுவலகம் தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகல்வி அலுவலகமாகவும், திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலகம் ஒட்டுமொத்த திருப்பூர் வருவாய் மாவட்ட கல்வி அலுவலமாக மாற்றப்பட்டுள்ளது.

இதற்கான ஆயத்தப்பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இனி, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கட்டுப்பாட்டுக்கு மாறும். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மட்டும் மாவட்ட கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்வித்துறை அலுவலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கட்டுப்பாட்டுக்கு மாறும். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மட்டும் மாவட்ட கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் இருக்கும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X