பஸ் படிக்கட்டில் சாகச பயணம்; ஆர்.டி.ஓ., - போலீசார் மவுனம்

Added : செப் 21, 2022 | |
Advertisement
திருப்பூர் : அவிநாசி - திருப்பூர் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பஸ்களில், மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.கோவையில் இருந்து அவிநாசி வழியே திருப்பூருக்கு இயக்கப்படும் தனியார் பஸ், (பி.என்.கே., - எஸ்.ஆர்.டி.,) நேற்று முன்தினம் காலை, 8:10 மணியளவில், திருப்பூர் நோக்கி சென்றது.பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்து

திருப்பூர் : அவிநாசி - திருப்பூர் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பஸ்களில், மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.

கோவையில் இருந்து அவிநாசி வழியே திருப்பூருக்கு இயக்கப்படும் தனியார் பஸ், (பி.என்.கே., - எஸ்.ஆர்.டி.,) நேற்று முன்தினம் காலை, 8:10 மணியளவில், திருப்பூர் நோக்கி சென்றது.பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்து கொண்டிருந்ததால், சக பயணிகள், 'படிக்கட்டில் தொங்கி கொண்டிருப்பவர்களை மேலேறி வர சொல்லுங்கள்,' என்றனர்.நடத்துனர் பலமுறை சொல்லியும், மாணவர்கள் பஸ்சுக்குள் வந்ததாக தெரியவில்லை. இதனால், பூண்டி ஸ்டாப்பில் பஸ் நிறுத்தப்பட்டது.

முன்புற படிக்கட்டில் தொங்கி கொண்டிருந்தவர், பின்புற படிக்கட்டு சென்றனர். ஆனாலும், தொங்கல் பயணத்தை மாணவர்கள் விடவில்லை.இவ்வாறு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், பஸ்சில் தொங்கல் பயணத்தை அனுமதிக்கும் பஸ் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து துறையினர் முன்வர வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X