மயிலாடுதுறையில் சமுதாய வளைகாப்பு

Added : செப் 21, 2022 | |
Advertisement
மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கலெக்டர் கர்ப்பிணியருக்கு வளையல் அணிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு, தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் சமுதாய வளைகாப்பு

மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கலெக்டர் கர்ப்பிணியருக்கு வளையல் அணிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு, தேசிய ஊட்டச்சத்து மாத விழா மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, கர்ப்பிணியருக்கு வளையல் அணிவித்து, விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தார்.எம்.எல்.ஏ.,க்கள் பூம்புகார் நிவேதா முருகன், மயிலாடுதுறை ராஜகுமார், சீர்காழி பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி தாலுகாக்களை சேர்ந்த 250 கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் யூனியன், நகராட்சி சேர்மன்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X