கருவலுார் அரசு பள்ளி மாணவர் கலக்கல்

Added : செப் 21, 2022 | |
Advertisement
அவிநாசி : அவிநாசி குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில், கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பரிசுகளை அள்ளினர்.இப்பள்ளி மாணவர்கள், தடகளம், 14 வயது பிரிவில் கவின், லக்ஷிதா ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். 17 வயது பிரிவில் புவனேஸ்வரி, தனி நபர் கோப்பையை தட்டி சென்றார்.மேஜை பந்து, 19 வயது ஒற்றையர் பிரிவில் காட்சன் ஜோயல் முதலிடம், இரட்டையர் பிரிவில் காட்சன்
கருவலுார் அரசு பள்ளி மாணவர் கலக்கல்

அவிநாசி : அவிநாசி குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில், கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பரிசுகளை அள்ளினர்.

இப்பள்ளி மாணவர்கள், தடகளம், 14 வயது பிரிவில் கவின், லக்ஷிதா ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். 17 வயது பிரிவில் புவனேஸ்வரி, தனி நபர் கோப்பையை தட்டி சென்றார்.மேஜை பந்து, 19 வயது ஒற்றையர் பிரிவில் காட்சன் ஜோயல் முதலிடம், இரட்டையர் பிரிவில் காட்சன் ஜோயல், கார்த்திகேயன் ஜோடி இரண்டாமிடம், 17 வயது ஒற்றையர் பிரிவில் நித்திஷ், இரண்டாமிடம் வென்றனர். கால்பந்து போட்டி, 14 வயது பிரிவில், இப்பள்ளி அணி முதலிடம் பெற்றது.

தடகளம், 14 வயது மாணவர் பிரிவில் சஞ்சய், உயரம் தாண்டுதலில் மூன்றாமிடம், கவின், 600 மீ., ஓட்டத்தில் முதலிடம், 800 மீ., தடை தாண்டும் ஓட்டம் மற்றும் உயரம் தாண்டுதலில் இரண்டாமிடம்.பதினான்கு வயது மாணவியர் பிரிவில் லக் ஷிதா, 600 மீ., மற்றும் 400 மீ., ஓட்டத்தில் முதலிடம். 800 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், மூன்றாமிடம். 17 வயது மாணவர் பிரிவில் சுதர்ஷன், குண்டு எறிதலில் மூன்றாமிடம். மாணவியர் பிரிவில், புவனேஸ்வரி, 3,000 மீ., 400 மீ., 100 மீ., மற்றும் தடை தாண்டும் ஓட்டத்தில், மூன்றாமிடம் பெற்று தனிநபர் கோப்பையை வென்றார்.

பத்தொன்பது வயது மாணவர் பிரிவில், ஐயப்பன், 200 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம். இதுதவிர, மாவட்ட தடகளத்தில், துளசிமணி, 3,000 மீ., ஓட்டத்தில், 3ம் இடம் பிடித்து, திருவண்ணாமலையில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்க உள்ளார்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைமையாசிரியை சத்யபாமா, உதவி தலைமையாசிரியர்கள் பிரபாவதி, உடற்கல்வி ஆசிரியர் மோகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X