கிரிவலப்பாதையில் சாதுக்களுக்கு'க்யூஆர்' கோடு அடையாள அட்டை

Added : செப் 21, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருவண்ணாமலை:''திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், குற்றப் பின்னணி உள்ளவர்கள், சாதுக்கள் வேஷத்தில் உள்ளனரா என கண்டறிய, சாதுக்களின் கை ரேகையை பதிவு செய்து, அவர்களுக்கு, 'க்யூஆர்' கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது,'' என, மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் கூறினார்.நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கும் திருவண்ணாமலைக்கு, தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள்
கிரிவலப்பாதையில் சாதுக்களுக்கு'க்யூஆர்' கோடு அடையாள அட்டை

திருவண்ணாமலை:''திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், குற்றப் பின்னணி உள்ளவர்கள், சாதுக்கள் வேஷத்தில் உள்ளனரா என கண்டறிய, சாதுக்களின் கை ரேகையை பதிவு செய்து, அவர்களுக்கு, 'க்யூஆர்' கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது,'' என, மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் கூறினார்.
நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கும் திருவண்ணாமலைக்கு, தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் சுவாமி தரிசனம் செய்த பின் கிரிவலம் செல்கின்றனர்.அவர்கள், சிவனாக வழிபடும் மலையை சுற்றி, 14 கி.மீ., துாரம் கிரிவலம் செல்லும் போது, 3,000க்கும் மேற்பட்ட சாலையோர சாதுக்களுக்கு, உணவு, உடை, பணம் வழங்குகின்றனர்.
சாதுக்களிடையே, குற்றப் பின்னணி உள்ளவர்கள் நடமாடுவதாக, போலீசாருக்கு புகார் சென்றது. உண்மையான சாதுக்களுக்கு பாதுகாப்பு வழங்கி, போலி சாதுக்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, போலீசார், சாதுக்களின் கை ரேகையுடன் கூடிய போட்டோ எடுத்து வருகின்றனர்.இதற்கு, சாதுக்கள் மிக ஆர்வமுடன், தங்கள் கை ரேகையை பதிவு செய்து, போட்டோ எடுக்கும் பணிக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
இது குறித்து, மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் கூறியதாவது: கிரிவலப் பாதையில், சாதுக்கள் போர்வையில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் திரிவதாக புகார்கள் வந்துள்ளன.இவர்களை தடுத்து, நிஜ சாதுக்களின் பாதுகாப்பு கருதி, கை ரேகையுடன் கூடிய போட்டோ எடுக்கப்பட்டு, அவர்களுக்கு, க்யூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KRISHNAN R - chennai,இந்தியா
22-செப்-202209:34:18 IST Report Abuse
KRISHNAN R நல்ல முடிவு. மற்ற ஊர்களிலும் போலிகள் உள்ளனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X