எக்ஸ்குளுசிவ் செய்தி

ஐகோர்ட் உத்தரவால் பதறும் பதிவுத்துறை! அங்கீகாரமற்ற மனை பதிவு செய்தால் 'டிஸ்மிஸ்'

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்த அதிகாரிகளை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டுமென, உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, பதிவுத்துறை அதிகாரிகளை கதிகலங்க வைத்துள்ளது.தமிழகத்தில் அரசுக்குச் சொந்தமான நிலங்கள், அங்கீகாரமற்ற மனையிடங்கள் போன்றவற்றை பத்திரப்பதிவு செய்வதைத் தடுக்க, பதிவுத்துறைச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யுமாறு உயர் நீதிமன்றம்
ஐகோர்ட் , பதிவுத்துறை, அங்கீகாரமற்ற மனை, டிஸ்மிஸ்

அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்த அதிகாரிகளை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டுமென, உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, பதிவுத்துறை அதிகாரிகளை கதிகலங்க வைத்துள்ளது.

தமிழகத்தில் அரசுக்குச் சொந்தமான நிலங்கள், அங்கீகாரமற்ற மனையிடங்கள் போன்றவற்றை பத்திரப்பதிவு செய்வதைத் தடுக்க, பதிவுத்துறைச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி, 2016 அக்., 20ல் பதிவுத்துறைச் சட்டத்தில் 22 ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது.

அதன் அடிப்படையில், அங்கீகாரமற்ற மனையிடங்களைப் பத்திரப்பதிவு செய்வது தடை செய்யப்பட்டது.ஆனால் இந்த திருத்தம் கொண்டு வந்த பிறகும் தமிழகம் முழுதும் பரவலாக, அங்கீகாரமற்ற மனையிடங்கள் பதிவு செய்யப்பட்டன.இந்நிலையில், சட்ட விரோதமாக அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்த அதிகாரிகளைக் கண்டறிந்து, அவர்களை பணிநீக்கம் செய்து வழக்கு பதிய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\

இந்த உத்தரவு, தமிழகம் முழுதும் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட சார் பதிவாளர்களை கதிகலங்க வைத்துள்ளது.ஏனெனில், இப்போது வரையிலும் அமைச்சர்கள், உயரதிகாரிகள், ஆளுங்கட்சியினர் பெயரைப் பயன்படுத்தி தமிழகம் முழுதும் அங்கீகாரமற்ற மனையிடங்கள் பதிவு செய்வது தொடர்ந்து நடக்கிறது.இவை எதுவுமே இல்லாவிட்டாலும், பல சார் பதிவாளர்கள், வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக லஞ்சம் வாங்கி, இந்த மனையிடங்களைப் பதிவு செய்து கொடுக்கின்றனர்.

உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, தமிழகம் முழுதும் ஆய்வு மேற்கொண்டால், பல்லாயிரக் கணக்கான அங்கீகாரமற்ற மனையிடங்கள் பதிவு செய்த விபரங்கள் தெரியவரும்.தவறு செய்த அதிகாரிகளைக் கண்டறிந்து, கோர்ட் உத்தரவின்படி டிஸ்மிஸ் செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை.

- நமது சிறப்பு நிருபர்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanujam Veraswamy - Madurai,இந்தியா
22-செப்-202217:35:06 IST Report Abuse
Ramanujam Veraswamy No tangible results will emerge in taking actions on corrupt registration dept officials as they too would have acted in registering unapproved sites, based on the DMK leaders, of course, after getting their due shares.
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-செப்-202216:06:00 IST Report Abuse
Sriram V Why judiciary is not asking concerned ministers to resign or sacked if the rules of land is not followed
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-செப்-202219:09:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்எக்ஸ் மினிஸ்டர் கேன் நாட் ரிசைன்....
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22-செப்-202211:59:50 IST Report Abuse
Natarajan Ramanathan கோவை வடவள்ளியில் 2008ல் பணியில் இருந்த சார்பதிவாளர் இதில் எக்ஸ்பர்ட்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X