புதுச்சேரி பல்கலை.,யில் சேர30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Added : செப் 22, 2022 | |
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி பல்கலையில் 10 ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி., எம்.ஏ., படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பில் சேர்வதற்கான 'கியூட்' நுழைவு தேர்வு ஜூலை 15 ம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ம் தேதி வரை நடந்தது. அதன் முடிவு சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைமுறையை துவங்கியுள்ள,



புதுச்சேரி-புதுச்சேரி பல்கலையில் 10 ஒருங்கிணைந்த எம்.எஸ்.சி., எம்.ஏ., படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பில் சேர்வதற்கான 'கியூட்' நுழைவு தேர்வு ஜூலை 15 ம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ம் தேதி வரை நடந்தது. அதன் முடிவு சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைமுறையை துவங்கியுள்ள, புதுச்சேரி பல்கலை நிர்வாகம், மாணவர் சேர்க்கைக்காகன விண்ணப்பம் www.pondiuni.edu.in/admissions--2022-23 என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது.எம்.எஸ்.சி., ஐந்தாண்டு படிப்புகளான அப்ளைடு ஜியோலஜி, வேதியியல், இயற்பியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், எம்.ஏ.,ஐந்தாண்டு படிப்புகளுக்கான வரலாறு, அரசியல் அறிவியல், சமூகவியல், சமூக பொருளாதார நிர்வாகம் மற்றுமு் சட்டம் (சீல்) படிப்பிற்கு வரும் 30 ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.விண்ணப்ப கட்டணம் பொது, ஓ.பி.சி., பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ரூ.250ம், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர்-ரூ.150 செலுத்த வேண்டும். கூடுதல் ஒவ்வொரு படிப்பிற்கு பொது, ஓ.பி.சி., பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் ரூ.100ம், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.50 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்திற்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X