புதுச்சேரி- முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள ரவுடிகள் வீடுகளில் போலீசார் நேற்றிரவு திடீர் சோதனை மேற்கொண்டனர்.புதுச்சேரியில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறன. இதனை தவிர்த்திட சீனியர் எஸ்.பி., தீபிகா உத்தரவின் பேரில் முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையில் 20 போலீசார் நேற்றிரவு முத்தியால்பேட்டை, திருவள்ளுவர் நகர், சின்னையாபுரம், வாழைகுளம் பகுதிகளில் உள்ள ரவுடிகள் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் குற்றப் பதிவேட்டில் உள்ள ரவுடிகள் வீடுகளில் உள்ளனரா?, ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளனரா? ஊரில் நுழைய தடைவிதிக்கப்பட்ட ரவுடிகள் யாரோனும் மீண்டும் வந்துள்ளனரா என ஆய்வு செய்தனர்.பின்னர், ரவுடிகளின் குடும்பத்தினரிடம், மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டால்குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என எச்சரித்தனர்.