புதுச்சேரி-திலாஸ்பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுமதிக்கு, பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு ஆசிரியர் சித்ராதேவிவரவேற்றார். ஆசிரியர்கள் கவுதமன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.விழாவில், பெண்கல்வி துணை இயக்குனர் நடனசபாபதி, பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுமதிக்கு நினைவு பரிசு வழங்கினார்.ஆசிரியர் சாந்தி வாழ்த்தி பேசினார். ஆசிரியர் பாலாஜி விழாவை தொகுத்து வழங்கினார்.ஆசிரியர் தமிழ்மலர் நன்றி கூறினார்.