செஞ்சி-செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி பார்மஸி கல்லுாரியில் டி.பார்ம் 7வது பேட்ச், பி.பார்ம், டி.எம்.எல்.டி., 4வது பேட்ச் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.கல்லுாரி சேர்மன் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராஜேஷ் வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களுக்கு கல்லுாரி சேர்மன் ரங்கபூபதி, செயலாளர் ஸ்ரீபதி புத்தகங்கள் வழங்கினர்.கல்லுாரி துணை முதல்வர் கண்ணபிரான், பேராசிரியர்கள் மோகன்ராஜ், இம்ரான்கான், சீனுவாசன், அருண்குமார், லில்லிஜூடி, பாலமுருகன், ராஜேஷ், கலைப்பிரியா, வள்ளி வாழ்த்துரை வழங்கினர். பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.