கடலுார்-கிரிம்சன் ஆர்கானிக்ஸ் நிறுவனம் சார்பில், 2 அங்கன்வாடி மையங்கள் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. கடலுார் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள கிரிம்சன் ஆர்கானிக்ஸ் நிறுவனம் சார்பில், செல்லங்குப்பம், குடிகாடு கிராமங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள் 3 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, திறப்பு விழா நடந்தது.விழாவுக்கு ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு தலைமை தாங்கி, அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கிரிம்சன் ஆர்கானிக்ஸ் நிறுவன இயக்குனர் ரமேஷ் பிரபாகரன், நிர்வாக இயக்குனர் பரணிதரன், பங்குதாரர்கள் பாக்யா, பாமா, ரமேஷ், பிரபாகரன், ஜேகப் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மனித வள மேம்பாட்டுத் துறை அலுவலர் பெனிசன் நன்றி கூறினார்.