எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, இன்று முதல் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.சிறப்பு பிரிவு, 7.5 சதவீத ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு நேரடியாகவும், பொது பிரிவினருக்கு ஆன்லைனிலும், 'கவுன்சிலிங்' நடைபெறும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள, 3௮ அரசு மருத்துவ கல்லுாரிகளில், 5,050
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பு, விண்ணப்பம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



சென்னை : 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, இன்று முதல் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.சிறப்பு பிரிவு, 7.5 சதவீத ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு நேரடியாகவும், பொது பிரிவினருக்கு ஆன்லைனிலும், 'கவுன்சிலிங்' நடைபெறும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.



தமிழகத்தில் உள்ள, 3௮ அரசு மருத்துவ கல்லுாரிகளில், 5,050 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; இரண்டு அரசு பல் மருத்துவ கல்லுாரிகளில், 200 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், 15 சதவீத இடங்கள் இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.அதேபோல், 20 சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 3,050 எம்.பி.பி.எஸ்., இடங்களில், 1,610 இடங்கள்; 1,960 பி.டி.எஸ்., இடங்களில், 1,254 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.


சுயநிதி கல்லுாரிகளில் மீதமுள்ள இடங்களுக்கு, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவ கல்வி இயக்கம் நடத்துகிறது.இந்நிலையில், 2022 - 23ம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இன்று முதல் அக்., 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.



latest tamil news


நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். கல்லுாரிகள், கட்டணம் போன்ற விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட உள்ள தகவல் தொகுபேட்டை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.மருத்துவ கல்வி தேர்வு குழு செயலர் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு,விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.



அதன்பின், கவுன்சிலிங் துவங்கும். சிறப்புபிரிவினர், அரசு பள்ளி மாணவர்களுக்கான7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைநேரடியாகவும், பொது பிரிவினருக்கு ஆன்லைன் வாயிலாகவும் கவுன்சிலிங் நடத்தப்படும்.


டாக்டர் முத்துச்செல்வன்

569 மருத்துவ 'சீட்'

தமிழகத்தில் மூன்றாவது ஆண்டாக, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதஒதுக்கீட்டில் மருத்துவ சேர்க்கை நடத்தப்படுகிறது.இந்தாண்டு அரசு மருத்துவ கல்லுாரிகளில், 325 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், 130 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; அரசு பல் மருத்துவ கல்லுாரிகளில், 13 பி.டி.எஸ்., மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் 101 பி.டி.எஸ்., என, 569 இடங்கள் உள்ளன.இதற்காக, ௭.௫ சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும்போது, உரிய சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த இடங்களுக்கு, 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.


'நீட்' மதிப்பெண் எப்படி

தமிழகத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167மாணவர்கள் 'நீட்' தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில், 67 ஆயிரத்து 787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மொத்த மதிப்பெண் ௭௨௦ல், பொது பிரினருக்கு குறைந்த பட்சம் 117; இதர இட ஒதுக்கீட்டுபிரிவினருக்கு 93 தேர்ச்சி மதிப்பெண்களாக உள்ளன.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-செப்-202211:02:17 IST Report Abuse
ஆரூர் ரங் நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்து 12 நாள் கழித்து விண்ணப்பம் வினியோகம். ஆக அக்டோபர் 15க்கு முன் வகுப்புகள் துவங்காது. அடுத்த ஆறே மாதத்தில் முதலாண்டுத்தேர்வு 🤪. அதுவும் முழுக்க முழுக்க ஆங்கில வழியில். எப்படி உருப்படியான டாக்டர்கள் வெளியே வருவார்கள்?
Rate this:
Cancel
22-செப்-202208:38:24 IST Report Abuse
எவர்கிங் போதுமான தற்கொலைகள் நடந்து முடிந்ததா? அல்லது இனிமேல்தான் அதிகரிக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X