தி.மு.க.,வின் லோக்சபா தேர்தல் திட்டம்; கூட்டணியில் இணையும் 3 கட்சிகள்?

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (49) | |
Advertisement
வரும் லோக்சபா தேர்தலில், பா.ம.க., - தே.மு.தி.க., மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.'லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை. தேசிய அளவில் பா.ஜ., கூட்டணியை எதிர்கொள்ள, எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தான் முடியும். தனித்தனியாக போனால் அது நிச்சயமாக பாதிக்கும்' என, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில்
திமுக, லோக்சபா தேர்தல் 2024, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், DMK, Lok Sabha Election 2024, PMK, DMDK, MNM,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


வரும் லோக்சபா தேர்தலில், பா.ம.க., - தே.மு.தி.க., மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.'லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை. தேசிய அளவில் பா.ஜ., கூட்டணியை எதிர்கொள்ள, எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தான் முடியும்.தனித்தனியாக போனால் அது நிச்சயமாக பாதிக்கும்' என, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்தார்.இதன் வாயிலாக, லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பலம் வாய்ந்த அணியை உருவாக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளில், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியை தவிர, மற்ற கட்சிகள் தொடர்கின்றன.ஆனால், தொகுதி பங்கீட்டில் சில மாற்றங்களை செய்து, அணியை பலப்படுத்த, கூடுதலாக சில கட்சிகளையும் சேர்க்க, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.latest tamil news

கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு தமிழகத்தில், 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டன. அதில் தமிழகத்தில், 8 தொகுதிகளும், புதுச்சேரியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு தமிழகத்தில், 4 தொகுதிகளுடன், புதுச்சேரியும் சேர்த்து ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கு, பா.ம.க., - தே.மு.தி.க., மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய 3 கட்சிகளையும் சேர்த்து, அணியை பலப்படுத்த தி.மு.க., திட்டமிடுவது தான் காரணம்.பா.ம.க.,விற்கு தர்மபுரியும், பெரம்பலுாரும் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியை, பா.ம.க., கேட்டால், காங்கிரசுக்கு வேறு தொகுதியை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளது. பா.ம.க., - ம.நீ.ம., கட்சிகளுக்கு தலா இரு தொகுதிகளும், தே.மு.தி.க.,வுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கலாம் என, தி.மு.க., தலைமை கருதுகிறது. இதற்காக, காங்கிரசுக்கான ௧௦ தொகுதிகளை பாதியாக குறைக்க, தி.மு.க., முன்வந்துள்ளது.தேசிய அளவில் எதிர்கட்சிகள் ஒன்றிணையவில்லை என்றாலும், தி.மு.க., தலைமையில், தமிழகத்தில் முக்கிய கட்சிகள் ஒன்று சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (49)

Radja - Singapore,சிங்கப்பூர்
22-செப்-202222:18:09 IST Report Abuse
Radja கோவிந்தா கோவிந்தா
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
22-செப்-202216:00:39 IST Report Abuse
Samathuvan முதலில் குஜராத்தை காப்பாற்ற பாருங்கள்.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
23-செப்-202207:16:59 IST Report Abuse
vadiveluகவலை வேண்டாம், அங்கே கெஜ்ரிவால் ஆட்சிக்கு வர முடியாது....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-செப்-202215:24:29 IST Report Abuse
Lion Drsekar Their agenda isagainst Hindus, Unity, Integration. The irony is no one has come forward to eradicate the poverty etc., They are all planning for their family developments . This is true. We are witnessing the same for the past three decades. Coming with empty hands become an indstrialists, Educationalist, Business magenet and so on. vandhe madaram
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X