காஞ்சி அரசு மருத்துவமனையில் பிணவறை குளிர்சாதனம் பழுது

Added : செப் 22, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்சானம் பழுதானதால், இறந்தவர்கள் உடலை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் இறந்தவர்கள் உடலை பாதுகாப்பாக வைத்திருக்க பிணவறையில் ஆறு குளிர்சாதன பெட்டிகள் உள்ளன.மருத்துவமனையில் இறந்தவர்கள், விபத்து மற்றும் தற்கொலை செய்து கொண்டவர்கள் உடல்கள் உடல்கூறு



காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்சானம் பழுதானதால், இறந்தவர்கள் உடலை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் இறந்தவர்கள் உடலை பாதுகாப்பாக வைத்திருக்க பிணவறையில் ஆறு குளிர்சாதன பெட்டிகள் உள்ளன.மருத்துவமனையில் இறந்தவர்கள், விபத்து மற்றும் தற்கொலை செய்து கொண்டவர்கள் உடல்கள் உடல்கூறு செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.



ஒரு சிலர் உடல்கள் அடையாளம் தெரியாமல் இருப்பதை குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாப்பாக வைக்கப்படும். அவ்வாறு வைக்கப்பட்டால், தொடர்ந்து குளிர்சாதன இயந்திரம் இயங்க வேண்டும்.அல்லது அந்த உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசத் துவங்கி விடும். ஒரு வாரமாக பிணவறையில் உள்ள குளிர்சாதன இயந்திரம் பழுதாகி வேலை செய்யாததால், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடலை வைக்க முடியாமல் செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதுார் போன்ற மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X