பிரதமர் வேலைவாய்ப்பு திட்டம்: தமிழகத்தில் 48 ஆயிரம் நிறுவனங்கள் துவக்கம்

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (28) | |
Advertisement
சென்னை--''பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தை, தமிழகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது; 14 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 48 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் உருவாகி உள்ளன,'' என, திட்டத்தின் துணை தலைமை செயல் அதிகாரி ராஜன்பாபு தெரிவித்தார். பி.எம்.இ.ஜி.பி., எனும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடர்பான, ஒரு நாள் பயிலரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. பயிலரங்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை--''பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தை, தமிழகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது; 14 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 48 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் உருவாகி உள்ளன,'' என, திட்டத்தின் துணை தலைமை செயல் அதிகாரி ராஜன்பாபு தெரிவித்தார்.



latest tamil news



பி.எம்.இ.ஜி.பி., எனும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடர்பான, ஒரு நாள் பயிலரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. பயிலரங்கை துவக்கி வைத்து, துணை தலைமை செயல் அதிகாரி ராஜன்பாபு பேசியதாவது:பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம், பாரம்பரிய தொழில் துறையை கவனத்தில் வைத்து உருவாக்கப்பட்டது. தற்போது, தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் சிறப்பாக செயல்பட, வங்கிகள் முதுகெலும்பாக செயல்படுகின்றன.

கடந்த 2008 முதல் 2022 மார்ச் வரை, இந்த திட்டத்தின் வாயிலாக, 7.82 லட்சம் தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும், 48 ஆயிரத்து 220 நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன.இதுவரை, 64 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 4.82 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதுவரை 51 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில், 1.5 லட்சம் நிறுவனங்கள் துவக்கவும், இதன் வாயிலாக 3,000 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்திற்கு, 5,800 நிறுவனங்கள் துவங்கவும், 170 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வங்கிகள் கடன் விண்ணப்பங்களை நிராகரிப்பதை குறைக்க வேண்டும். ஆண்டுக்கு 5,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டால், அதில் 20 சதவீதம் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.நீலகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பின்னடைவில் உள்ளன. இதர மாநிலங்களை விட, இந்த திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news




நிகழ்ச்சியில், தமிழக தொழில் வணிக இயக்குனரக கூடுதல் கமிஷனர் கிரேஸ் லால்ரிண்டிகி பச்சுவா, இந்தியன் ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் அமிர்தவள்ளி, காதி மற்றும் கிராமத் தொழில் இயக்குனர் சுரேஷ் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
22-செப்-202218:36:27 IST Report Abuse
venugopal s தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் முப்பொத்தொன்பது ஆண்டுகள் வேலை பார்த்த என் அனுபவத்தில் இது போன்ற அரசு மானியம் வழங்கப்படும் கடன்களில் 90 தோல்வி அடைகிறது. மானியத்துக்காகவும், வங்கிக் கடனுக்காகவும் ஆரம்பிக்கப்படும் தொழில்கள் பெரும்பாலும் தோல்வி அடைகிறது.1980களில் பி.எம்.ஆர்.ஒய் என்ற பெயரில் ஆரம்பித்து பின் பி.எம்.இ.ஜி.பி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இது நடைமுறையில் உள்ளது. 90 தொழில்கள் தோல்வி அடைந்தாலும் பத்து சதவீதம் தொழில் முனைவோர் ஆக வெற்றி பெற்று முன்னேற்றம் அடைவதால் மத்திய அரசு இதனை தொடர்கிறது.அதிலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட அதிகமாக பயன் அடைகிறது.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
22-செப்-202214:32:00 IST Report Abuse
Vena Suna கருப்பன் எவனுக்கும் வேலை கொடுக்காதீங்க. வடக்கு மனிதனுக்கு கொடுங்க.ஆரியனுக்கு கொடுங்க.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
22-செப்-202214:18:36 IST Report Abuse
vpurushothaman அப்படியா சபாஷ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X