சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கட்டடத்தை வரையும் இயந்திரம்

Added : செப் 22, 2022 | |
Advertisement
கட்டடக்கலை வல்லுனர்கள் போடும் வரைபடமான 'புளூபிரின்ட்', களப் பொறியாளர் கைக்கு வந்து, அவரிடமிருந்து மேஸ்திரியின் கைக்குப் போகிறது. அவர் அதை வைத்து கட்டடத்தைக் கட்டவேண்டும். ஆனால், புளூபிரின்டை அப்படியே பின்பற்றுவதில் நிறைய குளறுபடிகள் நடக்கின்றன.இதைத் தவிர்க்க, கணினி அச்சியந்திரங்களைத் தயாரிக்கும் எச்.பி., புதிதாக, 'சைட்பிரிண்ட்' என்ற சக்கரம் முளைத்த
புளூபிரின்ட், சைட்பிரின்ட், கட்டிடம் , Blueprint, Siteprint, Building,

கட்டடக்கலை வல்லுனர்கள் போடும் வரைபடமான 'புளூபிரின்ட்', களப் பொறியாளர் கைக்கு வந்து, அவரிடமிருந்து மேஸ்திரியின் கைக்குப் போகிறது. அவர் அதை வைத்து கட்டடத்தைக் கட்டவேண்டும். ஆனால், புளூபிரின்டை அப்படியே பின்பற்றுவதில் நிறைய குளறுபடிகள் நடக்கின்றன.

இதைத் தவிர்க்க, கணினி அச்சியந்திரங்களைத் தயாரிக்கும் எச்.பி., புதிதாக, 'சைட்பிரிண்ட்' என்ற சக்கரம் முளைத்த அச்சியந்திரத்தை உருவாக்கியிருக்கிறது. சைட்பிரின்ட் அச்சியந்திரம் தானாக இயங்கும் திறன் படைத்தது. கட்டிடம் கட்டும் இடத்திற்குக் கொண்டுபோய் விட்டுவிட்டால், தரை மீது பொடிக் கோலம் போடுவதுபோல, கட்டட வரைபடத்தை துல்லியமாக போட்டுவிடுகிறது.

வழக்கமாக, கட்டட 'லே அவுட்', வல்லுனர், இத்தகைய வரைபடத்தைப் போட, 7 முதல் 9 மணி நேரம் எடுத்துக்கொள்வார். ஆனால், சைட்பிரின்ட் இயந்திரம் 45 நிமிடங்களில் போட்டு முடித்துவிடுகிறது. இதில் துளியும் பிழை வராது.இது கட்டட வேலைகளை விரைவு படுத்தும் என்பதால், சைட்பிரின்ட் வரைபட இயந்திரம் செலவை கணிசமாகக் குறைக்கும். சில சமயம், மனிதர்கள் போடும் தவறான வரைபடத்தால், குறிப்பிட்ட அளவு கட்டிய பின், மீண்டும் இடித்துக் கட்டுவதும் அவ்வப்போது நிகழும். ஆனால் சைட்பிரின்ட் அத்தகைய விரயத்தையும் அறவே தவிர்த்து விடுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X