13 மாநிலங்களில் என்.ஐ.ஏ., சோதனை: தமிழகம் உள்பட பல நகரங்களில் 100 பேர் கைது

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (139) | |
Advertisement
புதுடில்லி: தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆள் சேர்த்தல், நிதி திரட்டல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது போல் எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்தவர்கள் வீடுகளிலும் ரெய்டு நடக்கிறது.கேரளா கோழிக்கோடு, டில்லி,
PFI ,NIA, Chennai, என்ஐஏ, தமிழகம், சென்னை, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, Tamil Nadu,  Popular Friend of India,

புதுடில்லி: தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆள் சேர்த்தல், நிதி திரட்டல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது போல் எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்தவர்கள் வீடுகளிலும் ரெய்டு நடக்கிறது.

கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உள்பட 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் இந்த ரெய்டு நடக்கிறது. பேகம்பூர், நெல்பேட்டை , கோரிப்பாளையம், வில்லாபுரம் , யாகப்பாநகர், ஏர்வாடி மதரசாவிலும் சோதனை நடந்து வருகிறது. கோவை கரும்புக்கடை பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.சில இடங்களில் இதன் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


இது வரை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் 100 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கிறது .

பலர் கைது !கோவையில் எதிர்ப்பு மறியல்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் கோவையை சேர்ந்த இஸ்மாயில் என்பவர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவரது கைதை கண்டித்து ஆதரவாளர்கள் பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இது போல் தேனி மாவடட்டம் கம்பத்தில் யாசர் அராபத், தென்காசி,திண்டுக்கல்,, மதுரை, கடலூரை சேர்ந்த முகம்மது அலி ஜின்னா, யாசர், யூசூப், பயாஸ் அகம்மது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (139)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu - chennai,இந்தியா
22-செப்-202222:16:02 IST Report Abuse
Visu மனிதன் என்ற பெயரில் வரும் மிருகமே RSS பற்றி உனக்கு என்ன தெரியும் சமுதாய காவலர்கள் போல காட்டி கொண்டால் மட்டுமே சட்டவிரோத வேலையை சுலபமாக செய்ய முடியும் என்பதால்தான் நீங்கலாம் ..
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
22-செப்-202222:05:50 IST Report Abuse
மனிதன் சமீபத்தில் RSSலிருந்து வெளியேறிய நபர் கூறியது என்ன? எங்கெல்லாம் வெடிகுண்டுவைத்தார்கள்? எப்படியெல்லாம் அதை முஸ்லிம்கள்மீல் போட்டார்கள் என்று விலாவாரியாக கூறியிருக்கிறார்... இவர்களே வெப்பங்களாம்,இவர்களே எடுப்பங்களாம் என்பதுபோல் இருக்கிறது ஆட்சியின் அவலம்...முஸ்லிம்களை தீவிரவாதியாக மக்கள்முன் சித்தரித்து, நீங்கள் அடையப்போகும் ஆதாயம் நிரந்தரமில்லை...அனைத்தையும் மக்கள் மெளனமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்...
Rate this:
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
24-செப்-202219:37:55 IST Report Abuse
MARUTHU PANDIARஇப்படி யெல்லாம் கதை அவிழ்த்து விடும் உன் பெயர் உண்மையில் ""மனிதன் "" தானா?...
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
22-செப்-202221:58:07 IST Report Abuse
மனிதன் ரத்ததானம், கொரோன காலத்தில் சடலங்களை உறவினர்களே புறக்கணித்தபோது, அதை அவர்கள் இறந்தவர்களின் மத சடங்கை செய்தே புதைத்தார்கள்.,வெள்ளம் வந்து நகரமே மூழ்கியபோது அவர்களின் அளப்பரிய பணிகள் இப்படி மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்பவர்கள்..
Rate this:
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
24-செப்-202222:06:40 IST Report Abuse
MARUTHU PANDIARபிடரியில் கைவைத்து தூக்கி, தலையை வெட்டும் மத சடங்கைத் தான் மக்களுக்காக சாரி, மதத்துக்காக அளப்பரிய வகையில் ..கன்சுகளுக்குச் செய்யத் தெரியும்++++.வேறெதுவும் கண்டிப்பாகத் செய்யத் தெரியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X