கோவை : கோவை மாவட்ட பா.ஜ., தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்ததை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான கட்சியினர், 400 பேர் நேற்றிரவு விடுவிக்கப்பட்டனர்.
நீலகிரி தொகுதி எம்.பி., ராஜாவை ஒருமையில் பேசியதாக நேற்று, பா.ஜ., கோவை மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து, கட்சியினர் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியினர், 400க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, பீளமேடு பகுதியில் உள்ள பிருந்தாவன் மண்டபத்தில் அடைத்தனர். இவர்களை, நேற்றிரவு, 10 மணிக்கு மேல் போலீசார் விடுவித்தனர்.