சென்னை : ஹிந்துக்கள் குறித்து அவதுாறாக பேசிய தி.மு.க., - எம்.பி., ராஜாவை கண்டித்து, 26ம் தேதி பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில் தமிழரின் மாண்பையும், மரபையும், இறை நம்பிக்கையும் இழிவு படுத்தும் செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. தமிழகத் தாய்மார்களை, தமிழினத்தை அவமதிக்கும் கருத்தை தெரிவித்த தி.மு.க., - எம்.பி., ராஜாவை கண்டித்து, கோவை மாவட்டத்தில் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., தொண்டர்கள், தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 26ம் தேதி பா.ஜ., சார்பில் அறவழியில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.