'பாசன நீர் வீணாவது வேதனை அளிக்கிறது!' : அமைச்சர் துரைமுருகன்

Added : செப் 22, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி : பரம்பிக்குளம் அணையில் மதகு உடைப்பு ஏற்பட்ட இடத்தை, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டார். நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:பரம்பிக்குளம் அணையில், 'ஷட்டர்' கழன்று விழுந்த நிகழ்வு, மன வருத்தம் அளிக்கிறது. இதுவரை இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதில்லை. பெரிய இரும்பு சங்கிலி கீழே விழுந்ததன் விளைவாகவே மதகு நொறுங்கியுள்ளது. பாசனத்துக்கு வழங்க
Parambikulam dam, minister Duraimurugan, shutter,பரம்பிக்குளம் அணை, அமைச்சர் துரைமுருகன் , ஷட்டர், மதகு உடைப்பு,



பொள்ளாச்சி : பரம்பிக்குளம் அணையில் மதகு உடைப்பு ஏற்பட்ட இடத்தை, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டார்.

நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:


பரம்பிக்குளம் அணையில், 'ஷட்டர்' கழன்று விழுந்த நிகழ்வு, மன வருத்தம் அளிக்கிறது. இதுவரை இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதில்லை. பெரிய இரும்பு சங்கிலி கீழே விழுந்ததன் விளைவாகவே மதகு நொறுங்கியுள்ளது. பாசனத்துக்கு வழங்க சேமித்து வைத்திருந்த தண்ணீர் வீணாவதை காணும் போது, மனம் வேதனையடைகிறது.


இந்த அணையில் இருந்து, 6 டி.எம்சி., தண்ணீர் வீணாகும். இந்த நீர் வடிந்து, ஷட்டர் மட்டத்துக்கு கீழே வந்த பிறகே, சீரமைப்பு பணி மேற்கொள்ள முடியும். முதல்வரிடம் கலந்து பேசி, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.மதகு உடைப்பால், திருமூர்த்தி அணைக்கு போகும் நீருக்கு எந்த பாதகமும் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இருமாநிலங்களும் இணைந்து தான் பணியாற்றுகிறோம். மற்ற அணைகளின் மதகுகளும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நீர் வளத்துறை முதன்மை செயலர் சந்தீப் சக்சேனா, மாவட்ட கலெக்டர் சமீரன், சப்- - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் மற்றும் அதிகாரிகள், கேரள மாநிலம், நெம்மாரா எம்.எல்.ஏ., பாபு உடனிருந்தனர்.


அணைக்கு 55 வயசாச்சு!


காமராஜர் முதல்வராக இருந்த போது, 1958ல் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தில், கீழ்நீராறு, மேல்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம், காடம்பாறை, மேல் ஆழியாறு, ஆழியாறு, திருமூர்த்தி அணைகள் சங்கிலி தொடர் போன்று உள்ளன. இதில், பரம்பிக்குளம் அணை மதகுகள், 1967ல் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைக்கு, 55 வயதாகிறது.


இந்த திட்டம் வாயிலாக, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அணை மொத்தம், 72 அடி உயரமும், 17.82 டி.எம்.சி., நீர் கொள்ளளவும் கொண்டது.கடந்த, 2016ல், பரம்பிக்குளம் மதகின் சக்கரங்கள் பழுது நீக்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X