அதிமுக கலவர வழக்கு: ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் ஆஜராக சிபிசிஐடி சம்மன்

Added : செப் 22, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் குறித்து விசாரணைக்கு முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தரப்பினர் இன்று(செப்.,22) ஆஜராக சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் கடந்த ஜூலை 11ல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலக வளாகத்தில், பன்னீர்செல்வம் - பழனிசாமி ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். இச்சம்பவம்
அதிமுக, கலவரம், வழக்கு, ஓபிஎஸ், இபிஎஸ்., சிபிசிஐடி, சம்மன்

சென்னை: அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் குறித்து விசாரணைக்கு முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தரப்பினர் இன்று(செப்.,22) ஆஜராக சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்
கடந்த ஜூலை 11ல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலக வளாகத்தில், பன்னீர்செல்வம் - பழனிசாமி ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து, அ.தி.மு.க., - எம்.பி., சண்முகம் புகார் அளித்தார்.
அலுவலகத்தில் இருந்து, சொத்து ஆவணங்கள், கணினிகள் என, ஏராளமான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும், பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிஇருந்தார். ராயப்பேட்டை போலீசார், பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் மீது, திருட்டு உட்பட, ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.


சம்மன்


இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக, டி.எஸ்.பி., வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கீழ், இன்ஸ்பெக்டர்கள் லதா, ரம்யா, ரேணுகா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த குழுவினர் விசாரணையை நடத்தினர்.
மேலும் அதிமுக அலுவலக மேலாளர் மகாதேவனுக்கு சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் கடந்த வாரம் விசாரணை நடந்தது. இந்நிலையில், இன்று(செப்.,22) விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க, இரு தரப்பினருக்கும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-செப்-202216:27:59 IST Report Abuse
எவர்கிங் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X