முதல்வர் குறித்து அவதூறு போஸ்டர்: அண்ணாமலை உதவியாளர் கைது

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (71) | |
Advertisement
சென்னை: முதல்வர் ஸ்டாலின் குறித்த அவதூறு போஸ்டர் விவகாரத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.வட சென்னை பகுதியில் கடந்த 11ம் தேதி பல்வேறு தெருக்களில் முதல்வரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிக்கை பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலம்
Stalin, BJP, Annamalai, Krishnakumar Murugan,  முதல்வர் ஸ்டாலின், பாஜக, அண்ணாமலை,கிருஷ்ணகுமார் முருகன், TamilnaduCM,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: முதல்வர் ஸ்டாலின் குறித்த அவதூறு போஸ்டர் விவகாரத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வட சென்னை பகுதியில் கடந்த 11ம் தேதி பல்வேறு தெருக்களில் முதல்வரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிக்கை பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலம் ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார் மற்றும் துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில், முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகளை ஒட்டுமாறு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கூறியதும், அவதூறு பரப்பும் வகையில் வாசகம் மற்றும் கார்ட்டூன்களை சித்தரித்து சிவகுருநாதன் என்பவருக்கு அனுப்பியதும் தெரியவந்தது.


latest tamil news


இதனையடுத்து அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், வண்ணார்பேட்டையை சேர்ந்த பிலிப்ராஜ், இந்து ஜனநாயக முன்னணி சென்னை மாநகர செயலாளர் சத்யநாதன், சிவகுருநாதன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

இதில் சிவகுருநாதன் முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் 5 ஆயிரம் போஸ்டர்களை சிவகாசியில் அச்சடித்து அவற்றை வழங்கறிஞர்கள் இருவரின் உதவியோடு, சத்யநாதன், பிலிப்ராஜ் ஆகியோருக்கு அனுப்பி வைத்து சென்னையில் ஒட்டியது விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharmavaan - Chennai,இந்தியா
23-செப்-202208:33:10 IST Report Abuse
Dharmavaan கோர்ட் இவற்றை ஏன் அனுமதிக்கிறது. எதற்கு தண்டனை பேச்சு சுதந்திரம் உள்ள இந்த நாட்டில்.கோர்ட் செய்வது சரியில்லை.
Rate this:
Cancel
பைரவர் சம்பத் குமார் 1). பயம் யாமேறியோம்.2). இறைவன் அவர்களது குலம் விளங்காமல் போக சபதித்தோம்.3). யா மே சபித்தஃம்ஃஃ, நன்றி
Rate this:
Cancel
22-செப்-202221:56:07 IST Report Abuse
சிந்தனை வெற்றிகொண்டான் போன்ற திமுக தலைவர்கள் ஹிந்துக்களை அசிங்கமாக பேசிதற்கும் தண்டித்திருக்க வேண்டுமே...
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
23-செப்-202208:23:39 IST Report Abuse
NicoleThomsonஅந்த மாதிரி ஆளுங்க விளங்காம தானே போனாங்க , அவர்களின் குலமும் தழைக்க வில்லையே அவர்களுள்ளேயே எவ்வளவு சண்டைகள் சச்சரவுகள் அப்பன் பேசினால் தப்பாம பிள்ளைக்கு என்று சும்மாவா சொன்னாங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X