இமாம்கள் அமைப்பு தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி: டில்லியின் கஸ்தூரிபா காந்தி மார்க்கில் உள்ள மசூதியில், அகில இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவரான இமாம் உமர் அஹமதுவை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார். மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.இது தொடர்பாக அந்த அமைப்பின்
RSS,  Mohan Bhagwat, chief, imam,discuss, promote , communal unity

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லியின் கஸ்தூரிபா காந்தி மார்க்கில் உள்ள மசூதியில், அகில இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவரான இமாம் உமர் அஹமதுவை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார். மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் சுனில் அம்பேத்கர் கூறுகையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அனைத்து தரப்பினரையும் சந்தித்து வருகிறார். தொடர் பேச்சுவார்த்தையின் ஒரு அங்கமாகும் என்றார்.


latest tamil news


முன்னதாக நேற்று (செப்.,21) முஸ்லிம் சமுதாயத்தினரை மோகன் பகவத் சந்தித்தார். டில்லி முன்னாள் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தேர்தல் கமிஷனர் குரேஷி , அலிகார் பல்கலை முன்னள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, ராஷ்ட்ரீய லோக்தளம் தேசிய துணைத்தலைவர் ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஷெர்வானி உள்ளிட்டோருடன் நடந்த இந்த சந்திப்பின் போது, மோகன் பகவத் கூறுகையில், இந்தியா முன்னேறி செல்கிறது. இந்த நேரத்தில் வெவ்வேறு சமுதாயம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில் நட்பு ஏற்படுவது அவசியம் என்றார்.


latest tamil news


இந்த சந்திப்பின் போது, மாற்று நம்பிக்கை கொண்டவர்களை சந்திப்பது, கருத்து வேறுபாடு உள்ள விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது எனவும் இருதரப்பினரும் ஒப்பு கொண்டனர். மத நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
22-செப்-202218:33:28 IST Report Abuse
Vijay D Ratnam இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. வேஸ்ட் ஆஃப் டைம் வேஸ்ட் ஆஃப் எனர்ஜி. மோகன் பாகவத அவர்களே உருப்படியான வேலை ஏதாவது இருந்தால் பாருங்கள்.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
22-செப்-202214:01:45 IST Report Abuse
Samathuvan அரை டிரௌசர்களை நம்ப வேண்டாம் இது வெறும் 2024 க்கான நீலிக்கண்ணீர். இதுவரை சாமானிய மக்கள் இந்த சனாதனிகளால் வீழ்த்தப்பட்டது போதும். எந்த சமரசமும் செய்து கொள்ளவேண்டாம்.
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
22-செப்-202214:34:07 IST Report Abuse
ramஆமாம் கேட்டுகோங்க...
Rate this:
Soumya - Trichy,இந்தியா
22-செப்-202215:20:57 IST Report Abuse
Soumyaகூடிய சீக்கிரம் வாலை நறுக்குவோம்...
Rate this:
22-செப்-202216:03:32 IST Report Abuse
Arunkumar,Ramnad நாளக்கி வெள்ளிக் கிழமை விஷேசம் எதுவும் உண்டா?🤣...
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
22-செப்-202218:26:53 IST Report Abuse
mindum vasanthamமுஸ்லீம் வாக்குகள் இல்லாமலே எங்களால் ஜெயிக்க முடியும் மேற்கெதிய நாடுகள் பாணி செகுலரிஸ்ம் தீங்கை உணர்த்தவே சில செய்யப்படுகின்றன...
Rate this:
Kanda kumar - Guntur,இந்தியா
22-செப்-202220:08:18 IST Report Abuse
Kanda kumarஅரை டவுசர நம்பிடாதீங்க. உங்க ரெண்டு பேரையும் பிரிச்சி தான் நாங்க லாபம் பார்த்திட்டு இருக்கோம்" ன்னு உங்க மைன்ட் வாய்ஸ் எங்களுக்கு கேக்குது, பாய் மார்களுக்கு எப்போ கேட்குதோ அப்போ ஒங்க ஆட்டம் முடிவுக்கு வந்துரும்....
Rate this:
Cancel
Tamil - Trichy,இந்தியா
22-செப்-202213:13:38 IST Report Abuse
Tamil மதத்தால் மக்களை பிளவு ஏற்படுத்தி எந்த நாடும் முன்னேறியதாக சரித்திரம் இல்லை. இருந்தபோதும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மனமாற்றம் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லாமல் சமூகங்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது நோக்கமானதாக இருக்கும்பட்சத்தில் மிகவும் வரவேற்கத்தக்கது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X