சமீபத்தில் வெளிவந்த அருள் சரவணனின் லெஜண்ட் படத்தில் அவர் தாய் சீ என்கிற சீன ஷேடோ பாக்ஸிங் கலையை விவேக்குக்கு செய்துகாட்டுவார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது. புரூஸ் லீ துவங்கி ஜெட் லீ வரை தாய் சீ செய்யாத ஆசிய ஹீரோக்களே இல்லை. தாய் சீ என்றால் என்ன, இதனைச் செய்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன எனப் பார்க்கலாமா?
![]()
|
தாய் சீ தாயிஸ, பெளத்த மற்றும் கன்ஃபூஷிய கலாசாரத்தின் வீரக்கலை. 12ம் நூற்றாண்டில் மத்திய ஆசிய நாடுகளில் உருவான இந்த கலையைக் கற்பிக்க அப்போது ஆசிய கண்டத்தில் பல இடங்களில் குருகுலங்கள் அமைக்கப்பட்டன. உடலை வலுவாக வைத்துக்கொள்ளவும், எதிரிகளிடமிருந்து துறவிகள் தங்களைத் தற்காத்துக்கொள்ளவும் யாங் ஷோகு, வூ சிங் சுவான், யாங் செங்ஃபூ ஆகியோர் இக்கலையை உருவாக்கினர். சீன பாரம்பரிய தற்காப்புக் கலைகளாக குங்ஃபூ, வூ ஷு போல அல்லாமல் தாய் சீ ஷேடோ பாக்ஸிங் முறையில் மேற்கொள்ளப்படும் தற்காப்புக் கலையாக உள்ளது.
![]()
|
இதனை பயிற்சி செய்ய எதிராளி தேவையில்லை. மூச்சில் கவனம் செலுத்தி மெதுவாக கைகளையும் கால்களையும் அசைத்து செய்வதே தாய் சீ கலை. இதனை தினமும் காலையில் செய்வதால் உடற்தசைகள் வலுவாகும், சுவாசம் சீராகும், மூளையின் ஆற்றல் அதிகரிக்கும். சீன திரைப்படங்களில் நாம் பார்த்து ரசித்த தாய் சீ, தற்போது இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிழக்காசிய நாடுகளில் பிரபலமாகிவிட்டது. சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் பலர் தாய் சீ பயிற்சி அளித்து வருகின்றனர்.
தாய் சீ கலையை முறையாகக் கற்றுத் தேற பல ஆண்டுகள் ஆகும். இதனை சரியாகச் செய்பவர்களால் தங்கள் கை அசைவினால் ஏற்படும் அதிர்வு மூலமாக அருகே உள்ள எரியும் மெழுகுவர்த்தியைக் கூட அனைத்துவிட முடியும் எனக் கூறப்படுவதுண்டு. (லெஜெண்ட் சரவணன் விவேக்கிடம் இவ்வாறு செய்து காண்பிப்பார்..!). கடந்த 800 ஆண்டுகளில் தாய் சீ கலையில் பல்வேறு நவீன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
![]()
|
தாய் சீ நிபுணர்கள் வம்சாவளியாக தங்கள் வாரிசுகளுக்கு இக்கலையை பயிற்றுவித்து வருகின்றனர். ஆனால் இந்தக் கலையில் மேதமை கொண்ட பல மூத்த குருமார்கள் பலர் தற்போது காலமாகிவிட்டதால் இதன் நுணுக்கங்கள் அடுத்த தலைமுறையினருக்குத் தெரியாமல் போனது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement