கல்லூரி மாணவி கொலை வழக்கு: காதலன் விடுதலை

Added : செப் 22, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
கடலூர்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகள் திலகவதி, 19; விருத்தாசலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில், பி.ஏ., இரண்டாமாண்டு படித்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு மே மாதம், வீட்டில் தனியாக இருந்த திலகவதி, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணையில், கடலூர் மாவட்டம்,
கல்லூரி மாணவி கொலை வழக்கு: காதலன் விடுதலை

கடலூர்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகள் திலகவதி, 19; விருத்தாசலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில், பி.ஏ., இரண்டாமாண்டு படித்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு மே மாதம், வீட்டில் தனியாக இருந்த திலகவதி, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணையில், கடலூர் மாவட்டம், பேரளையூரை சேர்ந்த ஆகாஷ், 19, கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். திலகவதியை, ஆகாஷ் ஒரு தலையாக காதலித்ததாகவும், காதலை ஏற்க மறுத்ததால் அவர் திலகவதியை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் ஆகாஷை போலீசார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆகாஷின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், திலகவதியின் பெற்றோர் மற்றும் உறவினர்களே கொலை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை 3 ஆண்டுகளாக நடந்த நிலையில், கடலூர் மகிளா நீதிமன்றம் இன்று (செப்.,22) தீர்ப்பளித்துள்ளது. அதில், ஆகாஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anumanthan Gnanasekaran - Lusaka,ஜாம்பியா
25-செப்-202211:18:37 IST Report Abuse
Anumanthan Gnanasekaran Super. In another case in future they can relese the culprit saying that the girl stabbed herself with knife and died. I don't know where it is all going.
Rate this:
Cancel
23-செப்-202216:20:58 IST Report Abuse
எவர்கிங் ஸ்வாதி கொலைக்கு இழப்பீடு கிடையாது வழக்கு தள்ளுபடி.... இங்கு தருதலை சொரி நாய்க்குட்டி புள்ளிங்கோ விடுதலை.... சபாஷ்
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
23-செப்-202212:19:08 IST Report Abuse
Anand இதென்ன கூறுகெட்டத்தனமா இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X