ஹிஜாப் வழக்கில் விசாரணை முடிந்தது: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
பெங்களூரு: முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ளது தொடர்பான வழக்கில், விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்து, இன்று(செப்.,22) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிராகத் துவங்கிய போராட்டம் மாநிலம்

பெங்களூரு: முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ளது தொடர்பான வழக்கில், விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்து, இன்று(செப்.,22) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.



latest tamil news



கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிராகத் துவங்கிய போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியதால், ஹிஜாபுக்கு அந்த மாநில அரசு கடந்த பிப்ரவரி 5ம் தேதிதடை விதத்து உத்தரவிட்டது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு விசாரித்து கடந்த மார்ச் 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
‛ஹிஜாப் அணிவது முஸ்லிம் சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல. பள்ளி சீருடை விதிகள் மீறுவது சரியல்ல. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும்' என உத்தரவிட்டது. மேலும், ஹிஜாப் தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


latest tamil news



கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 24 மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷீ தூலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று(செப்.,22) விசாரணை நடந்தது. இதனையடுத்து தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.


latest tamil news





புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-செப்-202203:24:19 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஹிஜாப் போட வேண்டும் என்பதை என்று கட்டாயமாக்கும் இரானிய மதத்(தரு) தலைவர்களுக்கும், ஹிஜாப் போடக்கூடாது என்று சட்டம் பேசும் இங்கிருக்கும் கட்சி , நீதிமன்ற, மத (தரு) தலைவர்களுக்கும் நூலிழை வித்தியாசமும் இல்லை. இரண்டுமே மூர்க்கத்தனம் தான். நடுவில் பாழாய்ப்போனது பெண்களின் உடையணியும் உரிமை.
Rate this:
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
22-செப்-202221:45:58 IST Report Abuse
N.K இன்று ஈரான் பற்றி எரிகிறது. இதே ஹிஜாபை எதிர்த்து.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-செப்-202203:16:57 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்பிரச்சினை, பெண்களின் உடை அணியும் உரிமையை அரசும், நீதிமன்றமும், மத (தரு)தலைகளும் முடிவெடுப்பதால் என்று உமக்கு புரியவில்லையா? அணிய மாட்டேன் என்றல் அவர் விருப்பம் விடுங்கள். அணிவேன் என்றால் இவர் விருப்பம் விடுங்கள். குறுக்கே மற்றவர்கள் எதற்கு என்கிறேன். புரிகிறதா??...
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
23-செப்-202213:36:50 IST Report Abuse
N.K இந்திய பெண்கள் ஹிஜாப் அணிய விருப்பப்பட்ட காரணம் என்ன. அதே மத தரு தலைகள்தான்....
Rate this:
Cancel
22-செப்-202220:41:41 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் அது தான் ஹிந்துக்கள் போடு வைக்க கூடாது என்று நீதிப்பதி கேட்டாரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X