தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: உயர்நீதிமன்றம் அனுமதி

Updated : செப் 23, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (37) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் 50க்கும் மேலான இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட ஒன்பது நகரங்களில், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி, உள்துறை மற்றும் டி.ஜி.பி.,க்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், எந்த முடிவும்
Chennai HC, RSS, Parade, Procession, Permission, சென்னை, உயர்நீதிமன்றம், ஆர்எஸ்எஸ், அணிவகுப்பு, ஊர்வலம், அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் 50க்கும் மேலான இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட ஒன்பது நகரங்களில், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி, உள்துறை மற்றும் டி.ஜி.பி.,க்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், எந்த முடிவும் எடுக்காததால், அனுமதி அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்பது இடங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், மனுக்கள் தாக்கல் செய்தனர்.

மனுக்களில், 'மற்ற மாநிலங்களில், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இங்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தவே போலீசுக்கு அதிகாரம் உள்ளது. அனுமதி மறுக்க அதிகாரம் இல்லை' என கூறப்பட்டது.


latest tamil news


இம்மனுக்கள் மீதான விசாரணை இன்று (செப்.,22) நடைபெற்றது. அப்போது, தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், வரும் செப்டம்பர் 28க்குள் தமிழக போலீஸ் அனுமதி வழங்க வேண்டும், நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-செப்-202205:38:10 IST Report Abuse
Kasimani Baskaran திராவிடச்சாக்கடைகளை கிளீன் செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
Rate this:
23-செப்-202212:34:16 IST Report Abuse
venugopal sஇவர்கள் அந்த வேலைக்கு மட்டுமே லாயக்கானவர்கள் என்கிறீர்களா?...
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-செப்-202216:49:33 IST Report Abuse
Kasimani Baskaran"லாயக்கானவர்கள் என்கிறீர்களா?" - திராவிடம் சாக்கடை என்று ஒத்துக்கொண்டால் அதை கிளீன் செய்வது சந்தேகமில்லாமல் திருப்பணிதான்....
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
23-செப்-202204:45:38 IST Report Abuse
Nepolian S தீவிர வாத பயிற்சிக்கு அனுமதி
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-செப்-202205:33:35 IST Report Abuse
Kasimani Baskaranதிராவிட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்படித்தான் தோன்றும்....
Rate this:
23-செப்-202205:35:48 IST Report Abuse
ராஜாஆம், மதமாற்ற, பிரிவினைவாத நாசகார சக்திகளிடம் இருந்து நாட்டை காக்க நாங்கள் நேதாஜி வழியில் ஆயுதம் ஏந்தி போராடக்கூட கூட செய்வோம். இது எங்கள் அகண்ட பாரதம். உன்னைப்போல் நாட்டுப்பற்று இல்லாத சந்தர்ப்பவாதிகளுக்கு பின்னாடி எரியுதில்ல..! அதற்க்குத்தான் இந்த அணிவகுப்பு....
Rate this:
Cancel
Visu - chennai,இந்தியா
23-செப்-202202:12:28 IST Report Abuse
Visu RSS மிகுந்த கட்டுபாடு மற்றும் ஒழுக்கம் நிறைந்த தேசப்பற்று மிக்க இயக்கம் தேசவிரோதிகள் எதிர்ப்பதில் ஆச்சர்யம் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X