நவராத்திரியும் நவீன சுண்டலும்!

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | |
Advertisement
நவராத்திரி வரப்போகுது… என்ன சுண்டல் வைக்கலாம், அதற்கு என்ன என்ன பயறு வகைகளை வாங்கலாம் என மளிகை லிஸ்ட் போட வேண்டும். வழக்கமாக நவராத்திரியை முன்னிட்டு கொண்டைக்கடலை, பாசிப்பயறு, காராமணி என பாரம்பரியப் பயறுகளை கொண்டு சுண்டல் செய்வோம். இந்த நவீன காலத்திற்கு ஏற்றவாறு சுண்டலிலும் சில மாற்றங்களை கொண்டுவந்தால், குட்டீசும் குதுகலமாவார்கள். அப்படி என்ன என்ன புதுவகை சுண்டல்
Lifestyle, food, Navarathiri, Sundal, லைப்ஸ்டைல், உணவு, நவராத்திரி, சுண்டல்

நவராத்திரி வரப்போகுது… என்ன சுண்டல் வைக்கலாம், அதற்கு என்ன என்ன பயறு வகைகளை வாங்கலாம் என மளிகை லிஸ்ட் போட வேண்டும். வழக்கமாக நவராத்திரியை முன்னிட்டு கொண்டைக்கடலை, பாசிப்பயறு, காராமணி என பாரம்பரியப் பயறுகளை கொண்டு சுண்டல் செய்வோம். இந்த நவீன காலத்திற்கு ஏற்றவாறு சுண்டலிலும் சில மாற்றங்களை கொண்டுவந்தால், குட்டீசும் குதுகலமாவார்கள். அப்படி என்ன என்ன புதுவகை சுண்டல் செய்யலாம் என இப்போது பார்க்கலாம்.


ஸ்வீட்கார்ன் சுண்டல்



latest tamil news



தேவையான பொருட்கள்

ஸ்வீட் கார்ன் - 2
தேங்காய்த் துருவல் - அரை மூடி
தனியா - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையானவை

செய்முறை:

தோலை நீக்கிவிட்டு ஸ்வீட் கார்னை வேகவைத்து எடுத்து கார்ன்களை உதிர்த்து வைத்துக் கொள்ளவும். அல்லது பாக்கெட்டுகளில் அடைத்து விற்க்கப்படும் உதிர்த்த கார்ன்களையும் வாங்கலாம். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், தனியா ஆகியவற்றை வறுத்து எடுத்து மிக்ஸியில் பொடி செய்ய வேண்டும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து கடுகு தாளித்து உதிர்த்து வைத்துள்ள ஸ்வீட் கார்ன், உப்பு, தேங்காய்த்துருவல், பொடித்த காரப்பொடி சேர்த்து நன்றாக கிளறி. நீரின்றி இறக்க வேண்டும். டேஸ்டியான ஸ்வீட் கார்ன் சுண்டல் ரெடி.


ஜவ்வரிசி, பாசிப்பருப்பு சுண்டல்



latest tamil news



தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி, பாசிப்பருப்பு, வறுத்த வேர்க்கடலை - தலா 100 கிராம்,
இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
மிளகாய் வற்றல் - 4
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஜவ்வரிசி, பாசிப்பருப்யை நன்கு ஊற வைத்து, தண்ணீரை வடிக்கவும். பின் அதை நன்கு வெகவிடவும். அவை வெந்தவுடன் வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இஞ்சி விழுது, மிளகுத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அதில் வெக வைத்த ஜவ்வரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலை, சேர்த்துக் கிளறி இறக்கவும். சத்துகள் நிறைந்த ஜவ்வரிசி, பாசிப்பருப்பு சுண்டல் ரெடி.


சோயா பீன்ஸ் சுண்டல் :



latest tamil news



தேவையான பொருட்கள்

வெள்ளை காய்ந்த சோயா பீன்ஸ் - 1/2 கப்
துருவிய தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
மிளகாய் வற்றல் - 4
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

சோயா பீன்சை ஒரு நாள் முன்பாகவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, குக்கரில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து 3 விசில் வரை, மிதமான தீயில் வேகவைக்கவும். வெந்தவுடன் நீரை வடித்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், பின் வேக வைத்த சோயா பீன்ஸை சேர்க்கவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். ஆரோக்கியம் நிறைந்த சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் ரெடி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X