சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் 20% சரிந்த ஃபோர்டிஸ் மருத்துவமனை பங்குகள்

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் எனும் சங்கிலித் தொடர் மருத்துவமனையினை கையகப்படுத்தும் மலேசிய நிறுவனமான ஐஎச்எச் ஒப்பந்தத்திற்கு உச்ச நீதிமன்றம் இன்று தடையை நீட்டித்ததால் அந்நிறுவனப் பங்குகள் 20 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும் ஃபோர்டிஸ் - ஐஎச்எச் ஒப்பந்தம் பற்றி தடயவியல் தணிக்கை செய்யவும் உத்தரவிட்டது.மலேசியாவின் ஐ.எச்.எச்., ஹெல்த்கேர் நிறுவனம் 2018ல் ஒரு சுதந்திரமான
SupremeCourt, Fortis, FortisHealthcare, Stockmarket, shareprice

ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் எனும் சங்கிலித் தொடர் மருத்துவமனையினை கையகப்படுத்தும் மலேசிய நிறுவனமான ஐஎச்எச் ஒப்பந்தத்திற்கு உச்ச நீதிமன்றம் இன்று தடையை நீட்டித்ததால் அந்நிறுவனப் பங்குகள் 20 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும் ஃபோர்டிஸ் - ஐஎச்எச் ஒப்பந்தம் பற்றி தடயவியல் தணிக்கை செய்யவும் உத்தரவிட்டது.

மலேசியாவின் ஐ.எச்.எச்., ஹெல்த்கேர் நிறுவனம் 2018ல் ஒரு சுதந்திரமான இயக்குனர் குழு மேற்பார்வையில் ஃபோர்டிஸ் நிறுவனத்தின் 31 சதவீத பங்குகளை ரூ.4 ஆயிரம் கோடிக்கு வாங்கியது. அதன் மூலம் ஓபன் ஆபர் என்கிற முறையில் 26 சதவீத பங்குகளை வாங்கும் வாய்ப்பினை ஐ.எச்.எச்., பெற்றது. இந்த கையகப்படுத்தலுக்கு எதிராக ஜப்பானைச் சேர்ந்த மருந்து நிறுவனமான டாய்ச்சி சான்கியோ வழக்கு தொடர்ந்தது. ஃபோர்டிஸின் முன்னாள் புரோமோட்டர்களான மல்வீந்தர் சிங் மற்றும் ஷிவிந்தர் சிங்கிடம் இருந்து ரூ.3,600 கோடி வசூலிக்க வேண்டியிருப்பதாக தெரிவித்தது.


latest tamil news


2008ல் ரான்பாக்சி மருந்து நிறுவனத்தின் புரமோட்டர்களாக இருந்த மல்விந்தர் சிங் மற்றும் ஷிவிந்தர் சிங் அப்போது ஜப்பானிய மருந்து நிறுவனமான டாய்ச்சி சான்க்யோவுக்கு பெரும்பாலான பங்குகளை கைமாற்றினர். அப்போது ரான்பாக்ஸி நிறுவனத்தில் நடந்த தவறுகள் தொடர்பான தகவல்களை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக 2016ல் சிங்கப்பூர் தீர்ப்பாயம் டாய்ச்சி சான்க்யோவுக்கு ரூ.3,600 கோடி நஷ்டஈடு வழங்கியது. அதனை வைத்து சிங் சகோதாரர்கள் மற்றும் இந்தியா புல்ஸ்க்கு எதிராக ஜப்பான் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. உச்ச நீதிமன்றம் தடை விதித்த போதிலும் போர்டிஸ் நிறுவனத்தில் 17 லட்சம் பங்குகளை இரு தரப்பும் அடகு வைத்ததாக தெரிவித்தது. மேலும் இவர்கள் மீது பண மோசடி, கடன் மோசடி போன்ற பல வழக்குகள் உள்ளன.


latest tamil news


இந்நிலையில் இன்று (செப்., 22) இந்த வழக்கில் போர்டிஸை முழுமையாக கையகப்படுத்தும் மலேசிய நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் மீதான தடையை நீட்டித்துள்ளது. மோசடியில் ஈடுபட்ட சிங் சகோதரர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. மேலும், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை பரிசீலித்து வரும் உயர் நீதிமன்றத்திற்கு, ஒப்பந்தத்தில் நடைபெற்ற பரிமாற்றங்கள் தொடர்பாக தடயவியல் தணிக்கைக்கும் பரிந்துரைத்துள்ளது. இதன் காரணமாக இன்று போர்டிஸ் ஹெல்த்கேர் பங்குகள் 20 சதவீதம் வரை சரிந்தது. பிற்பகலுக்கு மேல் 5 சதவீதம் உயர்ந்தது ரூ.264 என்ற நிலையில் வர்த்தகம் முடிந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-செப்-202209:33:55 IST Report Abuse
எவர்கிங் தரகர்களி ரன் அ push/pull impact
Rate this:
Cancel
JaiRam - New York,யூ.எஸ்.ஏ
22-செப்-202219:29:54 IST Report Abuse
JaiRam சக்காரிய கமிஷன் தீர்ப்புல குற்றவாளிக்கு இப்படி ஒரு தண்டனை கொடுத்துருந்தால் நாடு நல்லா இருந்துருக்கும்
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்நீங்கள் சொல்வது நடந்திருந்தால் தமிழகம் இன்று டாஸ்மாக் மாநிலமாக இல்லாமல் நாட்டின் ஒரு சிறந்த மாநிலமாக அல்லவா ஆகியிருக்கும். எங்கே???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X