காங்., தலைவர் என்பது சித்தாந்தப் பதவி: ராகுல்

Updated : செப் 23, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் பதவி என்பது நிறுவனப் பதவி மட்டுமல்ல, இது ஒரு சித்தாந்தப் பதவி என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‛பாரத் ஜோடோ' என்னும் பாத யாத்திரையை காங்., எம்.பி., ராகுல் நடத்தி வருகிறார். இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு
Congress President, Ideological Post, Rahul Gandhi, Rahul, Advice, ராகுல், காங்கிரஸ் தலைவர், பதவி, சித்தாந்தப் பதவி, அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் பதவி என்பது நிறுவனப் பதவி மட்டுமல்ல, இது ஒரு சித்தாந்தப் பதவி என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‛பாரத் ஜோடோ' என்னும் பாத யாத்திரையை காங்., எம்.பி., ராகுல் நடத்தி வருகிறார். இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (செப்.,24) தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. இது தொடர்பாக 15வது நாளாக நடைபயணம் மேற்கொண்ட ராகுலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ராகுல் கூறியதாவது:


latest tamil news


காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட கூடியவர்களுக்கு எனது அறிவுரை. நீங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பார்வையை வரையறுக்கும் நிலையை எடுக்கிறீர்கள். இது ஒரு நிறுவனப் பதவி மட்டுமல்ல, இது ஒரு சித்தாந்தப் பதவியாகும். இது இந்தியாவின் நம்பிக்கை அமைப்பு மற்றும் பார்வையைப் பிரதிபலிக்கிறது.

உதய்பூரில் ஒருவருக்கு ஒரு பதவி என்று நாங்கள் எடுத்த முடிவு காங்கிரசின் அர்ப்பணிப்பாகும். கட்சியின் தலைவர் பதவியிலும் இந்த அர்ப்பணிப்பு தொடரும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
23-செப்-202205:31:22 IST Report Abuse
meenakshisundaram இது என்ன புதுசா இருக்கு?கட்சி ஆரம்பிச்சு எத்தினி வருஷம் ஆச்சு-திராவிட மாடல் -மாதிரி என்னவோ புதுசா சொல்றாரே .எல்லாம் கூடா நட்பு தான்
Rate this:
Cancel
Visu - chennai,இந்தியா
23-செப்-202202:07:05 IST Report Abuse
Visu ஆமாம் மீடியாவை சந்திப்பதில்லை ஏனெனில் அது RSB சொன்னதைப் போல் செயல்படுவதால்
Rate this:
Cancel
Radja - Singapore,சிங்கப்பூர்
22-செப்-202222:15:36 IST Report Abuse
Radja நேற்று சீனாவில் நடந்ததை பார். நீதிபதி லஞ்சம் வாங்கினதுக்கு தூக்கு .அப்படி பார்த்தால் 2ஜீ , ஹெரால்ட் இன்டர்நேஷனல் ஊழல் உனக்கும் உன் குடும்பத்துக்கும் என்ன நடக்கணும் என்று நினைத்து பார்.அதேபோல தமிழ்நாட்டுல திமுக கூட்டம் மற்றும் திருட்டு மந்திரிகள் கதி என்னவாகும் மோடி நினைத்தால்..சீக்கிரம் கூண்டோடு திஹார் ததான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X