20 வயதில் ரூ.1,000 கோடிக்கு அதிபதி: இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் இவர்கள்!

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
இந்தியாவில் கோவிட் ஊரடங்கு பலரது வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிய நிலையில் ஒரு இளைஞரை ரூ.1,000 கோடிக்கு அதிபதியாக்கியுள்ளது. 2020 ஊரடங்கு சமயத்தில் வெளியே சென்று அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறி வாங்க முடியாமல் வீட்டிலிருந்தவர்கள் தவிப்பதை பார்த்து அதற்கு தீர்வாக ஆப் மூலம் ஆர்டர் செய்தால் உடனடி மளிகை, காய்கறி டெலிவெரி செய்தால் என்ன என்று கைவல்யா வோரா மற்றும் ஆதித்
Billionaire, RichestPerson, HurunIndiaList, இளம்_கோடீஸ்வரர்கள்

இந்தியாவில் கோவிட் ஊரடங்கு பலரது வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிய நிலையில் ஒரு இளைஞரை ரூ.1,000 கோடிக்கு அதிபதியாக்கியுள்ளது. 2020 ஊரடங்கு சமயத்தில் வெளியே சென்று அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறி வாங்க முடியாமல் வீட்டிலிருந்தவர்கள் தவிப்பதை பார்த்து அதற்கு தீர்வாக ஆப் மூலம் ஆர்டர் செய்தால் உடனடி மளிகை, காய்கறி டெலிவெரி செய்தால் என்ன என்று கைவல்யா வோரா மற்றும் ஆதித் பலிச்சாவுக்கு உதித்த யோசனை தான் செப்டோ நிறுவனம். அந்நிறுவனத்தை 2 ஆண்டுகளில் ரூ.6,750 கோடி மதிப்பு கொண்டதாக மாற்றியுள்ளனர்.

கைவல்யா வோரா (19) மற்றும் ஆதித் பலிச்சா (20) இருவரும் பால்யகால நண்பர்கள். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருவரும் பி.எஸ்சி., கணினி அறிவியல் சேர்ந்தார்கள். படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு 2020 மே மாதம் கோவிட் சமயத்தில் இந்தியா வந்து செப்டோ எனும் ஆன்லைன் மளிகை டெலிவெரி ஸ்டார்ட்அப்பை தொடங்கினர். செப்டோ என்பது நேரத்தின் மிகக் குறைந்த அளவை குறிக்கும் சொல். குறைந்த நேரத்தில் டெலிவெரி என்பதற்காக இந்த பெயரை தேர்ந்தெடுத்தனர். இவர்களது பிசினஸ் மாடல் பல முதலீட்டு நிறுவனங்களை ஈர்த்தன. பல சுற்றுகளாக ஏராளமான கோடி நிதி வந்தது.


latest tamil news


கடந்த மே மாதம் ஒய்சி கன்டினியூவிட்டி நிதி நிறுவனம் மூலம் ரூ.1,500 கோடி திரட்டியது. அதன் மூலம் செப்டோவின் சந்தை மதிப்பு ரூ.4,200 கோடியிலிருந்து, ரூ.6,700 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் செப்டோ நிறுவனர்களான கைவல்யா வோரா மற்றும் ஆதித் ஆகியோர் தனிநபர் சொத்து மதிப்பு முறையே ரூ.1,000 மற்றும் ரூ.1,200 கோடியாக உயர்ந்தது. தற்போது ஹூருன் இந்தியா ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டிஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்ட கோடீஸ்வர இந்தியர்கள் பட்டியலில் இவ்விருவரும் உள்ளனர். இதன் மூலம் ரூ.1,000 கோடி சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள மிக இளம் வயதினர் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
22-செப்-202219:41:56 IST Report Abuse
Rajagopal பெருமைப்பட வேண்டிய விஷயம். எல்லா இளைஞர்களும் வெறும் வேலை, சம்பளம் என்று இருந்து விடாமல் புதிதாக ஏதாவது முயற்சி செய்யுங்கள். தோல்விகளை ஏணிப்படிகளாக மாற்றி முன்னேறுங்கள். மற்றவர்களுக்கு உதாரணமாக மாறுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X