ஆந்திராவில் என்.டி.ராமாராவ் பல்கலை.யின் பெயரை மாற்ற தெலுங்கு தேசம் எதிர்ப்பு

Added : செப் 22, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
அமராவதி: ஆந்திராவில் முன்னாள் முதல்வர் என்.டி., ராமாராவ் பல்கலை. பெயரை ஓய்.எஸ்.ஆர்.பல்கலை என பெயர் மாற்றம் செய்து கொண்டு வரப்பட்ட மசோதாவிற்கு தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆந்திரா முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனருமான என்.டி.ராமாராவ் அறிவியல் பல்கலை. செயல்பட்டு வருகிறது. இப்பல்கலை. பெயரை மறைந்த முன்னாள் காங். முதல்வர் ஓய்.ஆர். ராஜசேகர
TDP appeals to Andhra Governor after CM Jagan Reddy renames varsity after father

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அமராவதி: ஆந்திராவில் முன்னாள் முதல்வர் என்.டி., ராமாராவ் பல்கலை. பெயரை ஓய்.எஸ்.ஆர்.பல்கலை என பெயர் மாற்றம் செய்து கொண்டு வரப்பட்ட மசோதாவிற்கு தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆந்திரா முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனருமான என்.டி.ராமாராவ் அறிவியல் பல்கலை. செயல்பட்டு வருகிறது. இப்பல்கலை. பெயரை மறைந்த முன்னாள் காங். முதல்வர் ஓய்.ஆர். ராஜசேகர ரெட்டி அறிவியல் பல்கலை. என பெயர் மாற்றம் செய்ய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


latest tamil news





ஆந்திர அரசின் இந்த முடிவுக்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, கட்சி நிர்வாகிகளுடன் இன்று கவர்னர் பிஷ்வபூசன் ஹரிசந்தனை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

இது குறித்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., கூறுகையில், என்.டி.ராமாராவின் புகழை யாராலும் அழிக்க முடியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
23-செப்-202211:16:47 IST Report Abuse
sankar வீண் வம்பு .
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
22-செப்-202222:45:48 IST Report Abuse
அசோக்ராஜ் திணிக்கப்பட்ட எதுவுமே பின்னர் உமிழப்படும். இயற்கை விதி.
Rate this:
Cancel
22-செப்-202221:17:34 IST Report Abuse
அநாமதேயம் இது தெலுங்கு மக்களின் நம்பிக்கையை வேரறுக்கும் நடவடிக்கை.இவர்களின் குடும்ப சொத்து போல அரசாங்க கஜானா நிறுவனங்களை நடத்தி வரும் இந்த கிரிப்டோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X