ஒரே நபர், நாலு பதவி, நாலு முகவரி... சமூக ஊடகங்களில் கிழியும் திமுக வின் சமூகநீதி முகத்திரை

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
திருப்பூர்:திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான இல.பத்மநாபன் தெற்கு மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதாக வெளியான தகவலையடுத்து திமுக வட்டாரத்தில் எதிர்ப்பு அலை வீச துவங்கியுள்ளது.திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் மு.பெ.சாமிநாதன். இவர் மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரது பரிந்துரையின் அடிப்படையில் தெற்கு மாவட்ட

திருப்பூர்:திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான இல.பத்மநாபன் தெற்கு மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதாக வெளியான தகவலையடுத்து திமுக வட்டாரத்தில் எதிர்ப்பு அலை வீச துவங்கியுள்ளது.latest tamil newsதிருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் மு.பெ.சாமிநாதன். இவர் மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரது பரிந்துரையின் அடிப்படையில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவிக்கு இல.பத்மநாபன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திமுகவின் சமூகநீதி வாரிசு அரசியலில் உதயநிதி களமிறங்கவே மு.பெ.சாமிநாதனின் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம் 4 ஆக பிரிக்கப்பட்டு தாராபுரம், காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக மு.பெ.சாமிநானும், அவிநாசி, பல்லடம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இல.பத்மநாபனும் அறிவிக்கப்பட்டனர்.பத்மநாபனுக்கு திருப்பூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட மூலனூர் சொந்த ஊராகும்.
ஆனால் தற்போதைய அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு தலைமையில் இருந்த நெருக்கத்தால் அவர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தனது முகவரியை பல்லடம் பகுதிக்கு மாற்றினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பத்மநாபன் முயற்சி மேற்கொண்டிருந்தார். ஆனால் கூட்டணி கட்சியான மதிமுகவிற்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. பின்னர் திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவியை குறிவைத்து 41 வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட்டார். இதற்காக அவர் திருப்பூருக்கு குடி பெயர்ந்தார்.
மேயர் பதவி மாநகர செயலாளர் தினேஷ்குமாருக்கு ஒதுக்கப்பட்டதால் இவரின் மேயர் கனவும் கலைந்தது. இருந்தும் அமைச்சரின் செல்வாக்கால் மண்டல தலைவர், டி.டி.சி.பி கமிட்டி உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வசப்படுத்தினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்தாலும் கிழக்கு மாவட்டத்திலும் அமைச்சர் சாமிநாதனுக்கு உதவியாக கட்சி பணிகளை செய்து வந்தார்.
மண் திருட்டு, பார் வசூல் போன்ற பிரச்சனைகளில் இவரது பெயர் தொடர்ந்து அடிபட்டே வந்தது. தற்போது திமுக வில் உடுமலை, மடத்துகுளம், காங்கேயம், தாராபுரம் தொகுதிகளை இணைத்து திருப்பூர் தெற்கு மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திமுக தலைமை கழகத்தில் துணை பொது செயலாளர் பதவிகளுக்கு கூடுதலாக நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மாவட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் அவருக்காக பம்பரம் போல சுழன்று வேலை செய்தவர்கள் கூட தற்போது அவருக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இதனால் மாவட்ட செயலாளர் தேர்தலில் போட்டியிடாமல் மாநில துணை செயலாளர் பொறுப்பிற்கு தாவ முடிவு செய்துள்ளார்.
அமைச்சரின் ஆதரவோடு மாவட்ட செயலாளர் பதவிக்கு இல.பத்மநாபன் களமிறக்கப்பட்டு உள்ளார். இதையொட்டி பத்மநாபன் தனது இருப்பிடத்தை காங்கேயத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பத்மநாபனுக்கு எதிராக அமைச்சரின் எதிரணி திமுக வினர் சமூக ஊடகங்களில் காரசாரமாக விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். எல்லா பதவிகளையும் ஒருவருக்கே கொடுப்பது குறித்து கிண்டலான மீம்களை வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர். அமைச்சர் ஆதரவு தரப்பிலோ பத்மநாபன் மாவட்ட செயலாளராக தேர்தெடுக்கப்பட்டதாக கூறி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


latest tamil newsதிருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கான தேர்தல் இன்று நடக்க இருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ள நிலையில் தேர்தெடுக்கப்பட்டதாக வாழ்த்து செய்தி பதிவுகள் எதிரணியினரை உட்சபட்ச கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் திமுக நிழல் தலைவராக செயல்படும் ஒருவருக்கு 10 ஸ்வீட் பாக்ஸ்கள் பத்மநாபன் தரப்பில் தரப்படுள்ளதாகவும் கட்சியினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. இதற்கு முன் காங்கேயம் ஒன்றிய நகர தேர்தலில் 50 குட்டி ஸ்வீட் பாக்ஸ்கள் கொடுத்து பதவி வாங்கப்பட்டதாக பேச்சு அடிபட்டதும் குறிப்பிட தக்கது. சமூக நீதி கட்சியின்னா சும்மாவா.. என மாற்று கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
25-செப்-202200:41:25 IST Report Abuse
naadodi இது சமூக நீதி அல்ல சமூக நிதி செய்யும் வேலை.
Rate this:
Cancel
தமிழன் - கோவை,இந்தியா
23-செப்-202215:19:22 IST Report Abuse
தமிழன் நேற்று சீனாவில் ஒரு முன்னாள் சட்ட அமைச்சர் ஊழல் செய்தது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதால், அவனுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இங்கு அப்படி செய்தால் எல்லா கேடுகெட்ட அரசியல்வாதிகளும் தூக்கில் தொங்கும் கண்கொள்ளாக் காட்சியைக் காணலாம்...ஆனால் இங்கு அப்படி ஒரு சட்டம் கொண்டு வர விடமாட்டானுகள்....
Rate this:
Rama Lingam - chennai,இந்தியா
25-செப்-202207:02:28 IST Report Abuse
Rama Lingamஇங்கு பொது மக்களைத்தான் போட்டு தள்ளுவார்கள் இந்த அரசியல்வாதிகள்...
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
23-செப்-202213:29:55 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy செய்தி துறையிலிருந்து பைசா வராது. எல்லாம் தலமையுடையது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X