வழுவூர் கோவில் திருப்பணியை விரைந்து முடிக்க மண்டியிட்டு நூதன போராட்டம்

Added : செப் 22, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மயிலாடுதுறை:வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் திருப்பணி களை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்திட வலியுறுத்தி இந்து மகா சபா சார்பில் நிர்வாகிகள் மண்டியிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் இளங்கிளை நாயகி உடனாகிய வீரட்டேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஞானசம்பந்தரின் தேவார
வழுவூர் கோவில் திருப்பணியை விரைந்து முடிக்க மண்டியிட்டு நூதன போராட்டம்

மயிலாடுதுறை:வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் திருப்பணி களை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்திட வலியுறுத்தி இந்து மகா சபா சார்பில் நிர்வாகிகள் மண்டியிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் இளங்கிளை நாயகி உடனாகிய வீரட்டேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஞானசம்பந்தரின் தேவார வைப்புத் தலமாக விளங்கிவரும் இத்தலத்தில் சிவபெருமான் யானையை பிளந்து வீர நடனம் ஆடியதால் அட்ட வீரட்டத் தலங்கள் ஆறாவது தலமாக விளங்கி வருகிறது. இத்தளத்தில் 48 ஆயிரம் ரிஷிகள் தவமிருந்து ஞானம் பெற்றுள்ளனர்.
மேலும் வராகி வழிபட்ட தலமாகவும் இது விளங்கி வருகிறது. இக்கோவிலில் சுவாமி அம்பாளை வழிபட்டால் வேண்டிய வரங்கள் அனைத்தும் உடனே கைகூடும் என்பது ஐதீகம். 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலின் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
திருப்பணி வேலைகள் முழு வீச்சில் நடத்தப்படவில்லை. இந்நிலையில் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்திட கோரி தலைவர் ராம நிரஞ்சன் தலைமையில் இந்து மகா சபா நிர்வாகிகள் கோவிலில் மண்டியிட்டவாறு கோஷமிட்டு நூத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் திருப்பணி செலவை அரசு ஏற்று பணியை செய்து முடிக்க வேண்டும். இதற்கு அரசு செவி சாய்க்காவிட்டால் பிச்சை எடுத்து நிதி திரட்டி கோவில் திருப்பணிகளை செய்வோம் என தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-செப்-202216:17:54 IST Report Abuse
எவர்கிங் உண்டியல் கொள்ளையடிக்க வரும்போது எப்பவாவது இப்படி போராட்டம் பண்ணி இருப்பாங்களா?!
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-செப்-202205:48:21 IST Report Abuse
Bhaskaran அந்த கோவிலில் மயிலை கோவில் போல் மரகதத்தில் ஏதேனும் சிலை இருந்தால் பெண் நிர்வாக அலுவலர் அதனை ஆட்டையை போடுவதற்காக கும்பாபிஷேக போர்வையில் சிலைகடத்தால் நடக்கும் அப்படி ஒன்னும் இல்லை போலிருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X