5 மாநில சட்டசபை தேர்தல்: பா.ஜ.,வின் செலவு ரூ.340 கோடி

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: இந்தாண்டு துவக்கத்தில், உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 340 கோடி ரூபாயும், காங்கிரஸ் 194 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளன.இந்தாண்டு துவக்கத்தில், உ.பி., கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்தன. இந்த தேர்தல்களில் செலவிடப்பட்ட தொகை குறித்த விபரங்களை, பா.ஜ., இணையதளத்தில்
5 மாநிலம் , சட்டசபை தேர்தல்  பா.ஜ.,,ரூ.340 கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தாண்டு துவக்கத்தில், உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 340 கோடி ரூபாயும், காங்கிரஸ் 194 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளன.
இந்தாண்டு துவக்கத்தில், உ.பி., கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்தன. இந்த தேர்தல்களில் செலவிடப்பட்ட தொகை குறித்த விபரங்களை, பா.ஜ., இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


இதன்படி, அக்கட்சி ஐந்து மாநிலங்களிலும் 340 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. அதிகபட்சமாக உ.பி.,யில் 221 கோடி; மணிப்பூரில் 23 கோடி; உத்தரகண்டில் 43 கோடி; பஞ்சாபில் 36 கோடி; கோவாவில் 19 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, பா.ஜ., தெரிவித்துள்ளது.


latest tamil news



இந்த ஐந்து மாநிலங்களிலும் 194 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தாண்டு இறுதியில், குஜராத், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதையடுத்து தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர்கள் அடுத்த வாரம் இங்கு
செல்லவுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
23-செப்-202212:06:54 IST Report Abuse
S.Baliah Seer கட்சிகள் தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்கின்றன என்பதற்கு காட்டும் கணக்குகள் பொய்யானவை.
Rate this:
Narayanan Muthu - chennai,இந்தியா
23-செப்-202212:19:51 IST Report Abuse
Narayanan Muthuஆக காட்டிய கணக்கு போல் பலமடங்கு அதிகம் இருக்கும் என்பதுதான் நிஜம்...
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
23-செப்-202211:57:07 IST Report Abuse
Narayanan Muthu உலகிலேயே மிகப்பெரிய பணக்கார கட்சின்னா சும்மாவா. எல்லாம் தேர்தல் பத்திர ஊழல் மூலம் நம்முடைய நண்பர்களின் கைங்கரியம்தான். விக்கிறோம் (அரசாங்க பொது சொத்தை) அதனால நாங்கள் வாங்குறோம் இதுதான் எங்கள் கட்சி கோட்பாடு. மில்லியன் கணக்கில் வங்கி கடன் தள்ளுபடிக்கு கிடைத்த பலன் இது.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
23-செப்-202210:45:28 IST Report Abuse
Mohan தனி ஒருவனுக்கே 350 கோடி கொடுத்தாரு எங்க தமிழக தல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X