ஸ்ரீபெரும்புதுார் அருகேபோலி போலீஸ் கைது

Added : செப் 22, 2022 | |
Advertisement
மணவாள நகர்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் பகுதியில், ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலையில் சினிமா தியேட்டர் உள்ளது.காலை 11:00 மணியளவில், போலீஸ் உடை அணிந்து வந்த நபர் ஒருவர், தியேட்டர் மேலாளர் சண்முகத்திடம் ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார்.பின், பள்ளி நேரத்தில் மாணவ - மாணவியர் தியேட்டருக்கு வருவதாக
ஸ்ரீபெரும்புதுார் அருகேபோலி போலீஸ் கைது

மணவாள நகர்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் பகுதியில், ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலையில் சினிமா தியேட்டர் உள்ளது.

காலை 11:00 மணியளவில், போலீஸ் உடை அணிந்து வந்த நபர் ஒருவர், தியேட்டர் மேலாளர் சண்முகத்திடம் ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார்.பின், பள்ளி நேரத்தில் மாணவ - மாணவியர் தியேட்டருக்கு வருவதாக புகார் வந்துள்ளது என கூறியுள்ளார். பின், தியேட்டர் மேலாளரிடம் எனக்கு ஐந்து சினிமா டிக்கெட் வேண்டும் என, கேட்டுள்ளார்.

இதையடுத்து சந்தேகமடைந்த தியேட்டர் மேலாளர் சண்முகம், மணவாள நகர் போலீசுக்கு தகவல் அளித்தார்.மணவாள நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் போலீஸ் உடை அணிந்து வந்த நபர், ஆர்.கே.பேட்டை பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம், 22, என்பது தெரிய வந்தது.

மேலும், அவர் போலீஸ் இல்லை என்பதும், உறவினர் ஒருவரின் காவலர் உடையை அணிந்து வந்ததும் தெரிய வந்தது என, மணவாள நகர் போலீசார் தெரிவித்தனர்.இதுகுறித்து, சண்முகம் அளித்த புகாரையடுத்து, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து சிவப்பிரகாசத்தை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X