சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ஆளுங்கட்சி இலக்கிய அணியில் அக்கப்போர்!

Added : செப் 22, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
ஆளுங்கட்சி இலக்கிய அணியில் அக்கப்போர்!''உரத்துக்கு செயற்கையா தட்டுப்பாடு ஏற்படுத்திட்டு இருக்காங்க...'' என்றபடியே வந்தார், அந்தோணிசாமி.''யாருவே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''மாநிலங்களுக்கு தேவையான உரங்களை, மத்திய அரசின் உரத்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்யுது... தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் தவிர, தனியாரும் உரம் விற்பனையில ஈடுபடுறாங்க...


 டீ கடை பெஞ்ச்


ஆளுங்கட்சி இலக்கிய அணியில் அக்கப்போர்!


''உரத்துக்கு செயற்கையா தட்டுப்பாடு ஏற்படுத்திட்டு இருக்காங்க...'' என்றபடியே வந்தார், அந்தோணிசாமி.

''யாருவே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''மாநிலங்களுக்கு தேவையான உரங்களை, மத்திய அரசின் உரத்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்யுது... தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் தவிர, தனியாரும் உரம் விற்பனையில ஈடுபடுறாங்க... இப்ப, கூட்டுறவு வங்கிகள், தனியார் கடைகளுடன் ஆளுங்கட்சியினர் கூட்டணி போட்டு, உரங்களுக்கு செயற்கையா தட்டுப்பாட்டை ஏற்படுத்திட்டு இருக்காங்க...

''இதை கட்டுப்படுத்த முடியாம, மாவட்ட வேளாண் அதிகாரிகள் மட்டுமின்றி, சென்னையில உள்ள வேளாண் துறை அதிகாரிகளும் தவிக்கிறாங்க... டெல்டா பகுதியில குறுவை சாகுபடி முடிஞ்சு, சம்பா சாகுபடி துவங்கியிருக்கு... உரத்துக்கு தேவை அதிகம் இருக்கிறதால, தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிக விலைக்கு வித்துட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''கவர்னரை பார்த்துட்டு போனதால, கலக்கத்துல இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''தமிழக அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் ஏழாம் பொருத்தமா இருக்குல்லா... இந்த சூழல்ல, சமீபத்துல தமிழகம் வந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தகவல் ஒலிபரப்பு இணை அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகிய மூணு பேரும், கவர்னர் ரவியை சந்திச்சு, அரை மணி நேரத்துக்கும் மேலா பேசிட்டு போயிருக்காவ வே...

''அதுக்கு முதல் நாள் தான், டில்லியில மத்திய அமைச்சர் அமித் ஷாவை, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பார்த்து, 'தமிழகத்துல சட்டம் - ஒழுங்கு சரியில்லை'ன்னு புகார் பண்ணிட்டு வந்தாரு வே... மறுநாளே, மத்திய அமைச்சர்கள், கவர்னரை பார்த்து பேசியதால, ஆளும் தரப்பு அதிர்ச்சியில இருக்கு... 'கவர்னர் அடுத்து என்ன குடைச்சலை தருவாரோ'ன்னு அந்தக் கட்சி புள்ளிகள் கலக்கத்துல இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''சொந்த கட்சி நிர்வாகியை கண்டிச்சு, ஆளுங்கட்சியினரே கண்டன தீர்மானம் போட்டிருக்கா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''தி.மு.க., இலக்கிய அணி சார்புல, சென்னையில சமீபத்துல முப்பெரும் விழாவும், முதல்வர் ஸ்டாலின் கடிதங்கள் நுால் வெளியீட்டு விழாவும் நடந்துது... இதுல, இலக்கிய அணி செயலரும், 'மாஜி' அமைச்சருமான இந்திரகுமாரி பேசுறப்ப, 'ஸ்டாலின் நுால் வெளியீட்டை தனி விழாவா நடத்தியிருக்கணும்'னு குறை சொல்லிட்டு, முதல்வரின் அருமை, பெருமைகளை பேசியிருக்காங்க ஓய்...

''திடீர்னு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான இலக்கிய அணி துணை செயலர் நந்தனம் நம்பிராஜன் எழுந்து வந்து, 'பேசியது போதும்... போய் உக்காரு'ன்னு இந்திரகுமாரியை தடுத்திருக்கார் ஓய்...

''அவங்களோ, 'நான் முதல்வரை புகழ்ந்து தானே பேசறேன்... என் உயிர் போனாலும் நிறுத்த மாட்டேன்'னு அடம் பிடிக்க, வலுக்கட்டாயமா பேச விடாம நம்பிராஜன் தடுத்துட்டார்...

''கடுப்பான இந்திரகுமாரி, விறுவிறுன்னு மேடையில இருந்து இறங்கி ஆத்துக்கு போயிட்டாங்க ஓய்... இப்ப நம்பிராஜனை கண்டிச்சு, திருவள்ளூர் மாவட்ட இலக்கிய அணி சார்புல கண்டன தீர்மானம் போட்டிருக்கா...

'இலக்கிய அணி பஞ்சாயத்தையும் அறிவாலயம் விசாரிக்கணும்'னு கட்சிக்காராள்லாம் சொல்றா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-செப்-202215:55:57 IST Report Abuse
ramesh .......
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
23-செப்-202212:07:42 IST Report Abuse
Anantharaman Srinivasan There is no controlling power with present DMK head has it was in Karunanidhi period ..
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
23-செப்-202210:57:11 IST Report Abuse
Girija இந்திர குமாரிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை என்னாச்சு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X