இதே நாளில் அன்று

Added : செப் 22, 2022 | |
Advertisement
செப்டம்பர் 23, 1923 துாத்துக்குடி மாவட்டம் இடைச்செவலில், குருசாமி - தாயம்மாள் தம்பதிக்கு மகனாக, 1923ல் இதே நாளில் பிறந்தவர் கு.அழகிரிசாமி. தெலுங்கை தாய்மொழியாக கொண்ட இவரும், எழுத்தாளர் கி.ராஜநாராயணனும் பால்ய நண்பர்கள்.இசை, ஓவியத்தில் திறமையான இவர், இளமையில், ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் எழுத்தால் கவரப்பட்டார். அவரது நுால்களை தமிழில் மொழி பெயர்த்தார். சங்கத் தமிழ்,


இதே நாளில் அன்று


செப்டம்பர் 23, 1923



துாத்துக்குடி மாவட்டம் இடைச்செவலில், குருசாமி - தாயம்மாள் தம்பதிக்கு மகனாக, 1923ல் இதே நாளில் பிறந்தவர் கு.அழகிரிசாமி. தெலுங்கை தாய்மொழியாக கொண்ட இவரும், எழுத்தாளர் கி.ராஜநாராயணனும் பால்ய நண்பர்கள்.இசை, ஓவியத்தில் திறமையான இவர், இளமையில், ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் எழுத்தால் கவரப்பட்டார். அவரது நுால்களை தமிழில் மொழி பெயர்த்தார். சங்கத் தமிழ், ஆங்கில இலக்கியங்களை வாசித்து, எழுதத் துவங்கினார்.
இவரின் முதல் சிறுகதை, 'ஆனந்த போதினி'யில் வெளியானது.

சார் - பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்த இவர், அதில் சலிப்பு ஏற்பட்டதால் விலகினார். 'ஆனந்த போதினி' இதழின் உதவி ஆசிரியராகி, நிறைய எழுதினார். பின், 'தமிழ்மணி, சக்தி, நவசக்தி, சோவியத் நாடு' உள்ளிட்ட இதழ்களில் ஆசிரியராக பணியாற்றினார். கம்பராமாயணம், காவடிச்சிந்து உள்ளிட்டவற்றை பதிப்பித்தார். கவிதை, சிறுகதை, கட்டுரை, புதினம், நாடகம், கீர்த்தனை மற்றும் மொழி பெயர்ப்பு நுால்களை எழுதிய கு.அழகிரிசாமி, 1970 ஜூலை 5ல், தன், 47வது வயதில் காலமானார்.மறைந்த பின் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரின் பிறந்த தினம் இன்று!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X