ரூ.15 லட்சம் கையாடல் மகளிர் சுய உதவிக்குழு புகார் வங்கி பணம் ரூ.15 லட்சம் கையாடல்மகளிர் சுய உதவினர் பரபரப்பு புகார்

Added : செப் 22, 2022 | |
Advertisement
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த இந்தலுார் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன.இந்த குழுவினர், கயப்பாக்கத்தில் உள்ள கனரா வங்கியில் கடன் பெற்று, தவணை முறையில், கடனை திருப்பி செலுத்தி வருகின்றனர்.கனரா வங்கியில், இந்தளூர் பகுதியைச் சேர்ந்த சுகாசினி, 32, மற்றும் சுந்தரி, 34, ஆகியோர் பணம் பெற்று, குழுவினரிடம் தருவர்.இந்தப் பணத்தை மாதந்தோறும்
ரூ.15 லட்சம் கையாடல் மகளிர் சுய உதவிக்குழு புகார் வங்கி பணம் ரூ.15 லட்சம் கையாடல்மகளிர் சுய உதவினர் பரபரப்பு புகார்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த இந்தலுார் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன.இந்த குழுவினர், கயப்பாக்கத்தில் உள்ள கனரா வங்கியில் கடன் பெற்று, தவணை முறையில், கடனை திருப்பி செலுத்தி வருகின்றனர்.

கனரா வங்கியில், இந்தளூர் பகுதியைச் சேர்ந்த சுகாசினி, 32, மற்றும் சுந்தரி, 34, ஆகியோர் பணம் பெற்று, குழுவினரிடம் தருவர்.இந்தப் பணத்தை மாதந்தோறும் வசூல் செய்து, வங்கியில் செலுத்துவது, இவர்களது வழக்கம். ஆனால் இவர்கள், மாதந்தோறும் வசூல் செய்யும் பணத்தை, வங்கியில் செலுத்தாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் வங்கி நிர்வாகம், கடன் பெற்ற பயனாளிகளின் வங்கி கணக்கை சமீபத்தில் முடக்கியது.கணக்கு முடக்கப்பட்டது குறித்து, வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, 15 லட்சம் ரூபாய்க்கு மேல், மகளிர் சுய உதவி குழுவினர் கட்ட வேண்டும் என, வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதனால் ஆத்திரமுற்ற 50க்கும் மேற்பட்ட பயனாளிகள், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அவர்கள், 'வங்கியில் செலுத்த வேண்டிய பணத்தை கையாடல் செய்த சுகாசினி, சுந்தரி ஆகியோரை பிடித்து விசாரிக்க வேண்டும். எங்கள் பணத்தை பெற்று தர வேண்டும்' என, ஆர்ப்பாட்டம் செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X