குழந்தைகளின் எதிர்கால உயர்கல்விக்கு இன்றிலிருந்து திட்டமிடுவது எப்படி?

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | |
Advertisement
ஒருவரின் வாழ்நாள் லட்சியமாக மூன்று முக்கிய விஷயங்கள் இருக்கும். ஒன்று கனவு இல்லம், அது நிறைவேறியிருந்தால் பிள்ளைகளுக்கு சிறந்த உயர்கல்வி, அதற்கடுத்து பிள்ளைகளின் திருமணம். சிலருக்கு சொந்த தொழில் கூட லட்சியமாக இருக்கலாம். இவை அனைத்தும் ஒன்று சேர்க்கும் விஷயம் பணம். இங்கு பிள்ளைகளின் எதிர்கால உயர்கல்விக்காக இன்றிலிருந்தே சிறுக சிறுக எப்படி எல்லாம் சேமிக்க
சேமிப்பு, கல்விச்செலவு, உயர்க்கல்வி, Savings

ஒருவரின் வாழ்நாள் லட்சியமாக மூன்று முக்கிய விஷயங்கள் இருக்கும். ஒன்று கனவு இல்லம், அது நிறைவேறியிருந்தால் பிள்ளைகளுக்கு சிறந்த உயர்கல்வி, அதற்கடுத்து பிள்ளைகளின் திருமணம். சிலருக்கு சொந்த தொழில் கூட லட்சியமாக இருக்கலாம். இவை அனைத்தும் ஒன்று சேர்க்கும் விஷயம் பணம். இங்கு பிள்ளைகளின் எதிர்கால உயர்கல்விக்காக இன்றிலிருந்தே சிறுக சிறுக எப்படி எல்லாம் சேமிக்க முடியும் என்பதை பார்ப்போம்.

எதிர்கால வாழ்க்கை நிம்மதியாக அமைய சிறந்த உயர்கல்வி அவசியமாகிறது. கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் என்பதை தாண்டி இன்று ஏராளமான உயர்கல்வி பிரிவுகள் வந்துவிட்டன. ஆனால் அதில் பலவற்றை பயில லட்சக்கணக்கில் செலவாகின்றன. பிள்ளைகளின் டீன் வயதில் நாம் அதற்காக கடன் கேட்டுக்கொண்டு அலைய முடியாது. பிள்ளை பிறந்த உடனேயே உயர்கல்விக்கென்று சிறு தொகையை ஒதுக்கி வந்தாலே போதும் அவை அடுத்த 15 ஆண்டுகளில் பெரிதாக வளர்ந்திருக்கும். எந்த வகையில் எல்லாம் குழந்தைகளின் உயர்கல்விக்காக சேமிக்கலாம் என்று பார்ப்போம்.


விரைவாக சேமிப்பை துவங்குங்கள்!latest tamil news


கூட்டு வட்டியின் அதிசயம் என்பார்கள். அந்த அதிசயத்தை காண நாம் விரைவாக சேமிப்பை துவங்க வேண்டும். 17 அல்லது 18 வயதில் தானே உயர் கல்வி சேர்ப்போம் அப்போது நெருக்கத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்பது கூடாது. நீங்கள் விரைவாக தொடங்கும் போது மியூச்சுவல் பண்ட், ஈடிஎப், பங்குச்சந்தை போன்றவற்றில் துணிந்து பணத்தை போடலாம். நிதி ஆலோசகர்கள் மூலமோ அல்லது உங்களது சுய ஆய்வின் மூலமோ சிறந்த திட்டத்தில் முதலீடு செய்யும் போது அவை ஆண்டுக்கு 10% என வளர்ச்சி கண்டாலும் அடுத்த 15 - 17 ஆண்டுகளில் முதலீடு இரு மடங்கிற்கு மேல் உயர்ந்திருக்கும். கல்விச் செலவு உயர்ந்திருந்தாலும் அதற்கேற்ப நமது ஆரம்பக்கால முதலீடும் வளர்ந்திருக்கும்.


இன்சூரன்ஸ் செய்துகொள்ளுங்கள்யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்பது தெரியாது. நாம் இல்லாமல் போனாலும் குடும்பம் வாட்டமடையக் கூடாது என்பதற்காக டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற அதிக செலவு வைக்கக் கூடிய விஷயங்கள் தடையின்றி தொடரும்.நீண்ட கால முதலீட்டு வாய்ப்புகள்பிள்ளைகளின் உயர்கல்வி என்பது நீண்ட கால இலக்கு என்பதால் நமது முதலீடும் அதற்கேற்ப இருக்க வேண்டும். மியூச்சுவல் பண்ட்களில் மாதாந்திர அடிப்படையில் தொடர் முதலீடு செய்வது சிறந்த ஒரு அம்சம். இது ஒரு முதலீட்டு ஒழுங்கை கொண்டு வருவதோடு இலக்கை அடையவும் உதவும். இது தவிர நிலையான ரிட்டர்ன் வழங்கக் கூடிய பிபிஎப்., வரியில்லாத பத்திரங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கக் கூடிய குழந்தைகளுக்கான திட்டங்கள் குறித்தும் பரிசீலித்து பார்த்து சேமிக்கலாம்.


தினசரி 100 ரூபாய் முதலீடு!latest tamil news


தினமும் 100 ரூபாய் என ஒதுக்கி மாதம் மூவாயிரத்தை சிறந்த மியூச்சுவல் பண்டாக தேர்ந்தெடுத்து முதலீடு செய்து வரலாம். அவை ஆண்டுக்கு 10 சதவீத வளர்ச்சி கண்டாலும் 15 ஆண்டுகளில் நாம் முதலீடு செய்த பணம் ரூ.5.4 லட்சமாக இருக்கும். ரிட்டர்ன் கிடைக்கக் கூடிய பணமோ ரூ.12 லட்சமாக, அதாவது ரூ.6 லட்சத்து 65 ஆயிரம் கூடுதலாக கிடைக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X