7 ஊராட்சிகளில்   வளர்ச்சி பணிகள்

Added : செப் 22, 2022 | |
Advertisement
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், மொத்தம் 27 ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், 2021 - 22ம் ஆண்டு வாயிலாக செருக்கனுார், வி.கே.ஆர்.புரம், பீரகுப்பம், கார்த்திகேயபுரம், அலுமேலுமங்காபுரம், சிறுகுமி மற்றும் சூர்யநகரம் ஆகிய ஏழு ஊராட்சிகளில், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுஉள்ளன.அந்த வகையில், மேற்கண்ட ஊராட்சிகளில், 'பேவர்

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், மொத்தம் 27 ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், 2021 - 22ம் ஆண்டு வாயிலாக செருக்கனுார், வி.கே.ஆர்.புரம், பீரகுப்பம், கார்த்திகேயபுரம், அலுமேலுமங்காபுரம், சிறுகுமி மற்றும் சூர்யநகரம் ஆகிய ஏழு ஊராட்சிகளில், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுஉள்ளன.
அந்த வகையில், மேற்கண்ட ஊராட்சிகளில், 'பேவர் பிளாக்' சாலை, அங்கன்வாடி மைய கட்டடம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், துவக்கப் பள்ளிகளில் சமையல் கூடம் மற்றும் சுடுகாடு சாலை போன்ற வசதிகள் ஏற்படுவதற்கு மொத்தம், 1 கோடியே 92 லட்சத்து 86 ஆயிரத்தி 648 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணிகள் மேற்கொள்வதற்கு, நேற்று, டெண்டர் விடப்பட்டது. மேற்கண்ட பணிகள் மூன்று மாதத்திற்குள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடவும், ஒன்றிய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.அதே போல், ஊராட்சிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை உடனுக்குடன் தீர்க்கவும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X