‛டாஸ்மாக் ஊழியர்கள் 40 சதவீதம் போனஸ் கேட்பு| Dinamalar

‛'டாஸ்மாக்' ஊழியர்கள் 40 சதவீதம் 'போனஸ்' கேட்பு

Added : செப் 22, 2022 | |
சென்னை:தீபாவளியை முன்னிட்டு, 40 சதவீதம் போனஸ் வழங்குமாறு, மதுக்கடை ஊழியர்கள், 'டாஸ்மாக்' நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி, பொதுச் செயலர் தனசேகரன் கூறியதாவது:மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என, மொத்தம், 26 ஆயிரம் பேர், டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். 19 ஆண்டுகளாக ஊழியர்கள் தொகுதிப்பூதிய

சென்னை:தீபாவளியை முன்னிட்டு, 40 சதவீதம் போனஸ் வழங்குமாறு, மதுக்கடை ஊழியர்கள், 'டாஸ்மாக்' நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி, பொதுச் செயலர் தனசேகரன் கூறியதாவது:

மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என, மொத்தம், 26 ஆயிரம் பேர், டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். 19 ஆண்டுகளாக ஊழியர்கள் தொகுதிப்பூதிய அடிப்படையில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு எந்தவித பணி பாதுகாப்பும் கிடையாது. தமிழக அரசுக்கு, மது விற்பனை வாயிலாக ஆண்டுதோறும் அதிக வரி வருவாய் கிடைக்கிறது.

கொரோனா காலத்தில் கூட ஊழியர்கள் வேலைக்கு வந்தனர். 2021 தீபாவளிக்கு, 10 சதவீதம் போனஸ் தான் வழங்கப்பட்டது.எனவே, இந்தாண்டு 40 சதவீதம் போனஸ் வழங்குமாறும், போனஸ் வழங்குவதற்கான உச்சவரம்பை நீக்குமாறும், டாஸ்மாக் நிறுவனத்திற்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X