சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

'டெர்ம் இன்சூரன்ஸ்'எதிர்காலத்தை பாதுகாக்கும்!

Added : செப் 22, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
காப்பீடுகளில் நடக்கக்கூடிய, 'மிஸ்செல்லிங்' தகிடுதத்தங்கள் குறித்தும், அதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது குறித்தும், விரிவாக எடுத்துச் சொல்லும் இன்சூரன்ஸ் துறை நிபுணர், எஸ்.ஸ்ரீதரன்: இன்சூரன்ஸ், மியூச்சுவல் பண்ட், கிரெடிட் கார்டு ஆகியவற்றில், அதிக அளவில், 'மிஸ் செல்லிங்' நடப்பதாக புகார்கள் வருகின்றன. இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்கும் ஏஜென்ட்கள் அல்லது வங்கி
சொல்கிறார்கள்


காப்பீடுகளில் நடக்கக்கூடிய, 'மிஸ்செல்லிங்' தகிடுதத்தங்கள் குறித்தும், அதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது குறித்தும், விரிவாக எடுத்துச் சொல்லும் இன்சூரன்ஸ் துறை நிபுணர், எஸ்.ஸ்ரீதரன்: இன்சூரன்ஸ், மியூச்சுவல் பண்ட், கிரெடிட் கார்டு ஆகியவற்றில், அதிக அளவில், 'மிஸ் செல்லிங்' நடப்பதாக புகார்கள் வருகின்றன.

இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்கும் ஏஜென்ட்கள் அல்லது வங்கி ஊழியர்கள், மக்களிடம் தவறான உத்தரவாதங்கள் கொடுப்பது, பலன்களை அதிகப்படுத்திக் கூறுவது, தகவல்களை முழுமையாக தெரிவிக்காமல் மறைப்பது, தேவை இல்லாத தவறான பாலிசியை தலையில் கட்டுவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுகின்றனர்.இன்சூரன்ஸ் தொடர்பான, 'மிஸ்செல்லிங்' வலையில், ஒருவர் சிக்காமல் இருக்க வேண்டும் எனில், எந்த இன்சூரன்ஸ் பாலிசியை எடுப்பதாக இருந்தாலும், அதன் அடிப்படை விஷயங்களை தெளிவாக தெரிந்து கொண்ட பின் எடுக்க வேண்டும். நம் அவசரமான சூழ்நிலையை, ஏஜென்ட்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முற்படுவர்; அதற்கு, நாம் இடம் தரக்கூடாது.எந்தவொரு இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்யும் முன்னரும், எந்த வகையில், அந்த பாலிசி உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று பார்ப்பது மிகவும் அவசியம். அந்த பாலிசி வாயிலாக, உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, அந்தப் பலன்கள் கிடைக்க என்னென்ன விதிமுறைகள் விதிக்கப்படுகின்றன. அந்த பாலிசியை ஏதோ ஒரு காரணத்தால் தொடர முடியாவிட்டால் என்னவாகும் என்பதை, விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஏஜென்ட்கள் வாய் வார்த்தையாக சொல்வதை எல்லாம் நம்பி விடக்கூடாது. அவர்கள் சொல்லும் விஷயங்கள் எல்லாம், பாலிசி ஆவணத்தில் உள்ளதா என்று, 'கிராஸ் செக்' செய்ய வேண்டும். பாலிசி தொடர்பான அனைத்து விபரங்களையும், மின்னஞ்சல் வாயிலாக, ஏஜென்டை அனுப்பச் சொல்லுங்கள்.பாலிசியை தேர்வு செய்யும் போதும், பாலிசி ஆவணத்தில் கையெழுத்திடும் முன்னரும், அந்த பாலிசி தொடர்பான விபரங்களை சரிபார்க்க வேண்டும். பாலிசியின் விபரங்களை வரி விடாமல் படித்துப் பார்க்க வேண்டும்.எண்டோமென்ட் பாலிசிகள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. 'டெர்ம் இன்சூரன்ஸ்' பாலிசியில், முதிர்வில் எந்தப் பணமும் கிடைக்காது. ஆனால், இந்தத் திட்டம் நமக்குப் பிறகான குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதாக இருக்கும். இந்தப் பாலிசியை மட்டுமே எடுத்து விட்டு, வேறு வகையான இன்சூரன்ஸ் பாலிசிகள் வேண்டாம் என ஒதுக்கி விடலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
23-செப்-202211:52:56 IST Report Abuse
Barakat Ali நல்ல அறிவுரை... ஆனால் எங்கள் மதக்கொள்கைப்படி இன்சூரன்ஸ் எடுப்பதை ஊக்குவிக்க மாட்டோம் ........
Rate this:
THANGARAJ - CHENNAI,இந்தியா
23-செப்-202216:54:31 IST Report Abuse
THANGARAJவாதம் செய்யவில்லை, சில நாடுகளில் இன்சூரன்ஸ் கட்டாயம், நீங்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் சரி. இதே இந்தியாவில், முஸ்லீம் இன்சூரன்ஸ் ஏஜென்ட்களும் உண்டு. Health Insurance, உங்கள் உறவினர்கள் வைத்து உள்ளார்களா? நமது சிறு சேமிப்பில், பொருளாதார நஷ்டம் ஏற்படுவதை தவிர்ப்பது தான் இன்சூரன்ஸ். உ.தா இரண்டு சக்கர வாகனத்துக்கு / கார் / கனரக வாகனங்களுக்கு ஏன் கண்டிப்பாக இன்சூரன்ஸ் எடுக்கிறோம்? (அரசு உத்தரவு) ஏன் லைப் இன்சூரன்ஸ் எடுப்பதில்லை? (அது நமது விருப்பம்.) இன்சூரன்ஸ் நமது வாழ்க்கையின் ஒரு அங்கம்....
Rate this:
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
23-செப்-202207:20:13 IST Report Abuse
THANGARAJ தவறு, Term Insurance மட்டும் போதும், மற்றவற்றை ஒதுக்கி விடலாம் என்று சொல்வது மிகவும் தவறு. LIC போன்ற இன்சூரன்ஸ் Endowment திட்டங்கள் பல சேமிப்பு மற்றும் குடும்ப பாதுகாப்பு என்ற அடிப்படையில் உருவாக்க பட்டுள்ளது. நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்றது. தங்கள் கட்டிய பணத்துடன் + போனஸ் + கூடுதல் போனஸ் என முதிர்வு காலத்தில் கிடைக்கும். இன்றைய சராசரி வாழும் வயது 60-70. இந்த காலகட்டத்தில் நமக்கு பல பண தேவைகள் வருகிறது, LIC திட்டங்களின் பலன்கள், வாழும்போது நமது மகள் திருமணம், மகள்/மகன் உயர் படிப்பு மிகவும் உதவியாக இன்றும் இருக்கிறது. டேர்ம் இன்சூரன்ஸ், நாம் சம்பாதிக்கும் காலம் முழுவதும் கட்டி கொண்டு இருப்போம், இறந்தால் மட்டும் பயன், இல்லை என்றால், கட்டிய பணம் திருப்ப கிடைக்காது. மேலும் இன்று கணினி துறையில் இருப்பர்களுக்கு வேலை/வருமானம் 45-50 வயது வரை தான், அதற்க்கு பின்பு மிக பெரிய சேமிப்பு தேவை, ஆதலால் Endowment பிளானில் முதிர்வு தொகை 1 கோடி கிடைக்கும் மாறு பாலிசி எடுத்து கொண்டால் குடும்பத்துக்கு பெருஉதவியாக இருக்கும்.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
23-செப்-202220:47:40 IST Report Abuse
கல்யாணராமன் சு.கருத்து சரியானது ..டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பவர்கள் அதை மட்டும் நம்பியிராமல், mutual fund டிலும் முதலீடு செய்தால், அவர்கள் உயிருடன் இருக்கும்போதும் பலன் கிடைக்கும் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X