மாடுகளுக்கு தோல் கழலை நோய் பரவலை தடுக்க அரசு நடவடிக்கை

Added : செப் 22, 2022 | |
Advertisement
சென்னை:'மாட்டினங்களுக்கு சுகவீனம் தென்பட்டால், உடனடியாக கால்நடை மருத்துவரிடம் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்' என, தமிழக கால்நடைத் துறை தெரிவித்துள்ளது.கால்நடைத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:வட மாநிலங்களில், பசு மற்றும் எருமை இனங்களை, தோல் கழலை நோய் தாக்க துவங்கிஉள்ளது.தமிழகத்தில் அந்த நோய் தாக்காமல் தற்காத்துக் கொள்ளும் வழிமுறை, சிகிச்சை மற்றும்

சென்னை:'மாட்டினங்களுக்கு சுகவீனம் தென்பட்டால், உடனடியாக கால்நடை மருத்துவரிடம் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்' என, தமிழக கால்நடைத் துறை தெரிவித்துள்ளது.

கால்நடைத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:வட மாநிலங்களில், பசு மற்றும் எருமை இனங்களை, தோல் கழலை நோய் தாக்க துவங்கிஉள்ளது.தமிழகத்தில் அந்த நோய் தாக்காமல் தற்காத்துக் கொள்ளும் வழிமுறை, சிகிச்சை மற்றும் உயிர் பாதுகாப்பு முறை குறித்து, அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அதன்படி பசு மற்றும் எருமை இனங்களில், கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் பரவுவதற்கு காரணமான பூச்சிகளை கட்டுப்படுத்தும் பணிகளும், கால்நடை உரிமையாளர்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்நோயால் பாதிக்கப்பட்ட பசு மற்றும் எருமை இனங்களின் தோலில், கழலை போன்ற வீக்கம் உருவாகி, அதிக காய்ச்சல், கண்களில் நீர் வழிதல், மூக்கில் சீழ் வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

இந்நோய், அம்மை வகை நச்சு உயிரியால் ஏற்படும். தமிழகத்தில் இந்நோயின் தாக்கம் பெருமளவில் இல்லை என்றாலும், அரசு கால்நடை பராமரிப்புத் துறை வழியாக, அனைத்து மாவட்டங்களிலும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நோயை கட்டுப்பாட்டில் வைக்க, அண்டை மாநிலங்களில் இருந்து, பசு மற்றும் எருமை இனங்கள் கொண்டு வருவதை தடுக்க, தீவிர கண்காணிப்புப் பணி நடந்து வருகிறது.மாட்டினங்களில் சுகவீனம் தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவரிடம் மாடுகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X