மளிகை பொருட்களை பறிக்கும் கும்பலால் பீதி| Dinamalar

மளிகை பொருட்களை பறிக்கும் கும்பலால் பீதி

Added : செப் 22, 2022 | |
போத்தனூர்;சுந்தராபுரம் அடுத்து ஈச்சனாரியிலிருந்து செட்டிபாளையம் செல்லும் சாலையில், கோல்டன் அவென்யூ உள்ளிட்ட பல்வேறு நகர்கள் உள்ளன. உள்ளுர் மக்களுடன் வட மாநிலத்தை சேர்ந்தவர்களும் வீடுகளிலும், அறைகளிலும் தங்கியுள்ளனர். இவர்கள் தங்களுக்கு தேவையான மளிகை, காய்கறியை அப்பகுதியிலுள்ள கடைகளில் வாங்கி செல்வர். அதுபோல் நேற்று முன்தினம் இரவு வட மாநிலத்தவர் இருவர், மளிகை

போத்தனூர்;சுந்தராபுரம் அடுத்து ஈச்சனாரியிலிருந்து செட்டிபாளையம் செல்லும் சாலையில், கோல்டன் அவென்யூ உள்ளிட்ட பல்வேறு நகர்கள் உள்ளன. உள்ளுர் மக்களுடன் வட மாநிலத்தை சேர்ந்தவர்களும் வீடுகளிலும், அறைகளிலும் தங்கியுள்ளனர். இவர்கள் தங்களுக்கு தேவையான மளிகை, காய்கறியை அப்பகுதியிலுள்ள கடைகளில் வாங்கி செல்வர். அதுபோல் நேற்று முன்தினம் இரவு வட மாநிலத்தவர் இருவர், மளிகை பொருட்கள் வாங்கிய பின், தங்களது அறைக்கு திரும்ப சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள ஜஸ்மாதேவி திருமண மண்டபத்தை தாண்டி செல்லும்போது, ஒரு கும்பல் இவர்களிடமிருந்து பொருட்களை பறித்து தப்பியது. தகவல் அறிந்த செட்டிபாளையம் போலீசார், நேற்று அப்பகுதியில் விசாரணை நடத்தினர். அப்பகுதியினர் கூறுகையில் 'கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரு கும்பல் மளிகை, காய்கறி பொருட்களை பிடுங்கிச் செல்கிறது. இதற்கு முக்கிய காரணம், சாலையில் பெரும்பாலான இடங்களில் தெரு மின் விளக்கு இல்லாததே' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X