சசிகலா கூட்டத்தில் கைவரிசை

Added : செப் 22, 2022 | |
Advertisement
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைபேர், பாலவாக்கம் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வேனில் பிரசாரம் செய்தார். இரவு, 8:00 மணியளவில், ஊத்துக்கோட்டையில் பிரசாரம் செய்தார். அப்போது கூட்டத்தில் பங்கேற்றவர்களிடையே புகுந்த மர்ம நபர், அங்கிருந்த ஒருவரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்க முயன்றார். இதை

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைபேர், பாலவாக்கம் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வேனில் பிரசாரம் செய்தார்.

இரவு, 8:00 மணியளவில், ஊத்துக்கோட்டையில் பிரசாரம் செய்தார். அப்போது கூட்டத்தில் பங்கேற்றவர்களிடையே புகுந்த மர்ம நபர், அங்கிருந்த ஒருவரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்க முயன்றார். இதை பார்த்தவர், 'திருடன் திருடன்' என்று கத்தினார். அங்கிருந்தவர்கள் அந்த நபரை துரத்திப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

லத்த காயமடைந்த அவரை, அங்கிருந்து போலீசார் மீட்டனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, சிகிச்சைக்காக ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து விசாரித் ததில், பிடிபட்டவர் நெல்லுரை சேர்ந்த சாய், 28, என்பது தெரிந்தது; போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X