நீதானா அந்த எமகாதகன்... 22 வாகனங்களுடன் கைது!

Added : செப் 22, 2022 | |
Advertisement
கோவை:கோவை அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில், பைக் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவை அரசு மருத்துவமனை, அரசு கலைக்கல்லுாரி ரோடு, ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட இடங்களில், பைக் திருட்டு தொடர்ந்து நடந்து வந்தது. இந்த பிரச்னை, போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருந்தது.அரசு மருத்துவமனையில் ஆள் நடமாட்டம், போலீஸ்
நீதானா அந்த எமகாதகன்... 22 வாகனங்களுடன் கைது!

கோவை:கோவை அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில், பைக் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவை அரசு மருத்துவமனை, அரசு கலைக்கல்லுாரி ரோடு, ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட இடங்களில், பைக் திருட்டு தொடர்ந்து நடந்து வந்தது. இந்த பிரச்னை, போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருந்தது.அரசு மருத்துவமனையில் ஆள் நடமாட்டம், போலீஸ் அவுட் போஸ்ட், பாதுகாவலர்கள் இருந்த நிலையிலும் பைக் திருட்டு தொடர்ந்து கொண்டே இருந்தது. இதில் ஈடுபடும் நபர்களை பிடிக்க, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில், ரோந்துப்பணியின்போது, பைக்கில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் விசாரித்தனர். அவர் ஓட்டி வந்த பைக், திருடப்பட்டது என்று கண்டறியப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், அரசு மருத்துவமனையில் தொடர்ந்து வாகனம் திருடியது அவர் தான் என்றும் உறுதி செய்யப்பட்டது.உடையாம்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ், 30, என்ற அந்த வாலிபரிடம் இருந்த 22 மொபட், ஸ்கூட்டி போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேறு திருட்டு சம்பவங்களில் அவருக்கு தொடர்புள்ளதா என்று, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X