வட அயர்லாந்து கடலில் 35 கி.மீ., நீந்தி தேனி மாணவர் சாதனை

Added : செப் 22, 2022 | |
Advertisement
தேனி:தேனியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவர் சினேகன், வட அயர்லாந்து நாட்டின் வடக்கு கால்வாய் கடலில் 35 கி.மீ., துாரத்தை 14 மணிநேரம் 39 நிமிடத்தில் நீந்தி சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.தேனி பழைய அரசு மருத்துவமனை ரோட்டை சேர்ந்த நீதிராஜன்-- அனுஷா தம்பதியினரின் மகன் சினேகன். இவர் தேனி மெட்ரிக் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். இவர் 2 முறை இந்தியாவில் இருந்து

தேனி:தேனியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவர் சினேகன், வட அயர்லாந்து நாட்டின் வடக்கு கால்வாய் கடலில் 35 கி.மீ., துாரத்தை 14 மணிநேரம் 39 நிமிடத்தில் நீந்தி சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தேனி பழைய அரசு மருத்துவமனை ரோட்டை சேர்ந்த நீதிராஜன்-- அனுஷா தம்பதியினரின் மகன் சினேகன். இவர் தேனி மெட்ரிக் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். இவர் 2 முறை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பாக்ஜலசந்தி கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார். தற்போது வட அயர்லாந்து நாட்டில் உள்ள வடக்கு கால்வாய் கடலில் 35 கி.மீ., துாரத்தை பிரீ ஸ்டைல் முறையில் நீந்தி சாதனை படைக்க முடிவெடுத்தார்.
இதற்காக செப்., 2ல் வடக்கு அயர்லாந்து சென்ற மாணவர், 12 முதல் 15 டிகிரி வரை குளிர்ந்த நீரில், கடல் நாய்கள், சிறிய ரக சுறாமீன்கள் நிறைந்துள்ள கடலில் 10 நாட்கள் பயிற்சியாளர் விஜயகுமார் வழிகாட்டுதலில் பயிற்சி பெற்றார். அதன்பின் செப்., 20ல் அந்நாட்டின் நீச்சல் பயிற்சியாளர்களுடன், பாதுகாப்புடன் கடலில் நீந்தினார்.
அந் நாட்டின் நேரப்படி செப்., 21ல் காலை 6:30 மணிக்கு துவங்கி, இரவு 9:00 மணிக்கு வட அயர்லாந்து முதல் ஸ்காட்லாந்து வரையிலான 35 கி.மீ. துாரம் சினேகன் கடலில் நீந்தினார்.18 வயதிற்கு கீழ் உள்ளவர்களில் இதுவரை யாரும் இந்த துாரம் கடலில் நீந்தாத நிலையில் சினேகன் இச்சாதனை புரிந்துள்ளார். செப்., 27ல், தேனி திரும்பும் இவருக்கு இணைய வழியில் பாராட்டுக்கள் குவிகின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X